இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.

205 0

இயக்குனர் வெற்றிமாறனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை எடுத்துள்ளார். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.

இந்நிலையில் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் பல சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகியுள்ளது. பொல்லாதவன் தொடங்கி அசுரன் வரை இவர்களது காம்போவில் வெளியான படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. இதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் என்றால் வடசென்னை.

சென்னையில் முக்கிய இடங்களில் ஒன்றான வடசென்னையில் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தில் தனுஷை காட்டிலும் அமீரின் கதாபாத்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. இப்போது அமீர் மற்றும் வெற்றிமாறன் மீண்டும் கூட்டணி போட்டுள்ளனர்.

அதாவது நிலமெல்லாம் ரத்தம் என்ற வெப் தொடரில் இவர்கள் இணைந்துள்ளனர். இதில் அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் இந்தத் தொடரின் தயாரிப்பு மற்றும் கதை வெற்றிமாறன். நிலமெல்லாம் ரத்தம் தொடரின் பணிகள் இப்போது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாம்.

மேலும் இந்த தொடர் ஜீ 5 ஓடிடி தளத்திற்காக உருவாகி வருகிறது. சில வருடங்களுக்கு முன்பே இந்த கூட்டணி உருவாக இருந்த நிலையில் வெற்றிமாறன் வேறு படங்களில் பிசியானதால் இந்த தொடர் தள்ளிப் போனதாக சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அமீர் பேசி இருந்தார்.

இந்நிலையில் மீண்டும் அமீர் மற்றும் வெற்றிமாறன் கூட்டணி இணைந்துள்ளதால் கண்டிப்பாக வட சென்னை போன்ற ஒரு கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை வெற்றிமாறன் பூர்த்தி செய்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

ரோமியோவை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க! – விஜய் ஆண்டனி

Posted by - April 20, 2024 0
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தான் நடித்த ரோமியோ படத்தை அன்பே சிவம் திரைப்படமாக மாற்றிவிட வேண்டாம் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி…

ஆயுத பூஜையில் குறைந்த வேட்டையன் வசூல்.. 2வது நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Posted by - October 12, 2024 0
ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10 தியேட்டரில் வெளியாகி இருந்தது. பொதுவாகவே பண்டிகை நாட்களை குறி வைத்ததால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அதேபோல்…

படம் மீதான நம்பிக்கை போச்சு!. இனி மகள் பேச்சை கேட்க மாட்டேன்..ஆடியோ லாஞ்சில் ரஜினிகாந்த் பேச்சு

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷ்ராஃப், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் என பெரிய…

10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 19, 2023 0
போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த…

திருமணம் எப்போது, திருமணம் எப்போது என கேட்பவர்களுக்கு.. ஸ்ருதிஹாசன் மாஸ் பதில்

Posted by - January 24, 2025 0
ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமாவில் பாடகர், இசையமைப்பாளராக களமிறங்கி பின் நாயகியாக எல்லா மொழிகளிலும் நடித்து அசத்தி வந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். சூர்யாவின் ஏழாம் அறிவு படத்தின் மூலம் தனது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *