”சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி கூடாது…” எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!

239 0

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார்.

சட்டமன்றத்தில் நாளை பட்ஜெட் மீதான விவாதமும், 29ம் தேதி முதல் மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடைபெறவுள்ளது. இதில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்குதல், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிடட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது கூட்டத்தொடரில் திமுக எம்.எல்.ஏக்கள் எவ்வாறு செயல்பட வேண்டுமென்று முதல்வர் ஆலோசனை வழங்கினார். எதிர்க்கட்சிகள் என்றால் அவையில் விமர்சிக்கத் தான் செய்வார்கள் என்று கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அவ்வாறு விமர்சிக்கும் போது திமுக உறுப்பினர்கள் அடக்கமாக இருக்கவேண்டும் என்றும், மூத்த அமைச்சர்கள் எதிர்க்கட்சியினருக்கு பதில் அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினர் நிதியை சரியாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், என்ன பேச வேண்டுமோ அதனை அழுத்தம் திருத்தமாக பேச வேண்டும் என்றும், சட்டப்பேரவையில் தேவையற்ற புகழ்ச்சி வேண்டாம் என்றும் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்

Related Post

கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?

Posted by - December 8, 2025 0
பணி நியமனங்களில் முறைகேடு விவகாரத்தில் 1,020 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக தெரிவித்துள்ள அமலாத்துறை அமைச்சர் கே என் நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய கோரி…

உறுதியானது பாஜக – பாமக கூட்டணி… எத்தனை தொகுதிகள்..? எந்தெந்த தொகுதிகள்..?

Posted by - March 19, 2024 0
பாமகவுக்கு 10 தொகுதிகளை பாஜக அளிப்பது தொடர்பாக ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-பாமக இடையே கூட்டணி அமைத்து, தொகுதிப்பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில்…

அதிரடியாக கட்சியை அறிவிக்கும் விஜய்.. விசுவாசிகளுக்கு வைத்த முக்கியமான வேண்டுகோள்

Posted by - January 26, 2024 0
சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சு விட்ட மாதிரி சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த விஜய்யை சில அரசியல்…

📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள் அதிகரிப்பு – நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு என்ன?

Posted by - February 18, 2026 0
📢 தமிழ்நாடு நிதிநிலை: இலவசங்கள், மானியங்கள் – நிர்வாகத்தின் பொறுப்பு என்ன? சென்னை:தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்கள் மற்றும் மானிய செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலத்தின் கடன்…

அவர் வருவாரா.? எதிர்பார்ப்பில் எடப்பாடி பழனிசாமி.. பலிக்குமா கணக்கு.?

Posted by - April 15, 2025 0
அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்த ஒருவரை இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாம் அந்த கூட்டணி. அந்த அவர் சிக்குவாரா.? அதிமுக கணக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *