‘சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவினார்’ – டெவோன் கான்வே புகழாரம்

254 0

எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார்.

சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்பட தோனி உதவியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே புகழாரம் சூட்டியுள்ளார். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது பாயின்ட்ஸ் டேபிளில் 3 ஆவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, ப்ளே ஆஃப் சுற்றுக்கு எளிதாக தகுதி பெற்று விடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். அணியில் இடம்பெற்றுள்ள ருதுராஜ் கெய்கவாட், ஷிவம் துபே, டெவோன் கான்வே உள்ளிட்ட வீரர்கள் திறமையாக விளையாடி வருவதால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

குறிப்பாக நியூசிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் டெவோன் கான்வே இந்த தொடரில் சிறப்பாக ரன்கள் குவித்து சென்னை அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அவர் தோனி குறித்து அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது- தோனியை கேப்டனாக பெற்றிருப்பது எனக்கு மிகவும் ஸ்பெஷலான விஷயமாகும். கிரிக்கெட்டில் அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவர் எனக்கு ஆதரவாக இருப்பதை நான் மிகவும் சிறப்பாக உணர்கிறேன்.

நான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக செயல்படுவதற்கு தோனி உதவினார். அவர் மிகவும் அமைதியாக இருப்பார். எந்த நேரத்திலும் தோனி பதட்டப்பட மாட்டார். மிகவும் சுதந்திரமாக நாங்கள் விளையாட தோனி அனுமதிக்கிறார். ஒரு வீரருக்கு என்ன தேவையோ அவற்றை தோனி நிறைவேற்றித் தருகிறார். நான் அதிகமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளேன். இப்போது டி20  போட்டிக்கு ஏற்றவாறு என்னை நான் மாற்றிக் கொண்டுள்ளேன். டி20யை பொருத்தளவில் அனைத்து பந்துகளையும் அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மனநிலைக்கு நான் மாறுவேன். இந்த விஷயத்தில் ரிஸ்க் அதிகமாக இருக்கும். ஆனாலும் த்ரில்லிங் அதிகம் இருப்பதால் டி20 போட்டிகளை அதிகம் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Post

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 500 சிக்சர் அடித்த முதல் இந்திய வீரர் – ரோகித் சர்மா சாதனை

Posted by - December 8, 2022 0
இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா 28 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என…

இது வெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இல்லை..இது ஒரு விக்ரமன் சார் படம் தான்!

Posted by - May 30, 2023 0
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி வெற்றிகரமாக வலம் வருவதற்கு காரணம் என்ன என்று பல வீரர்களிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் ஒரே பதில் சிஎஸ்கே ஒரு அணி…

IND vs ENG 4th Test: இந்தியா முதலில் பேட்டிங்.. கழட்டிவிடப்பட்ட கருண் நாயர்! அணிக்குள் வந்த சிஎஸ்கே புயல்!

Posted by - July 23, 2025 0
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணிக்காக அன்சுல் கம்போஜ் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.…

மக்களவை தேர்தல் எதிரொலி… ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றப்படுகிறதா? – பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா விளக்கம்

Posted by - March 18, 2024 0
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும், ஐபிஎல் போட்டிகள் இந்தியாவிலேயேதான் நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 2024ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர், மார்ச் 22ஆம் தேதி…

நீ பொட்டு வச்ச தங்க குடம்! சேப்பாக்கில் மாஸ் என்ட்ரி கொடுத்த தோனி… மரண மாஸ் வீடியோ

Posted by - March 24, 2025 0
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் எம்.எஸ் தோனி எப்போது பேட்டிங் வருவார் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தனர். இளம் விக்கெட் கீப்பர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *