பெட்ரூமில் இந்த பொருட்கள் இருந்தால் இப்பவே தூக்கியெறிங்க…!

237 0

பலரும் தான் இருக்கும் வீட்டை அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள். குறிப்பாக கிச்சன், வரவேற்பரை, பால்கனி மற்றும் படுக்கையறைகளை நேர்த்தியாக வைத்திருக்க விரும்புவோம். ஆனால், பலராலும் அது முடியாத ஒன்று. நாம் அழகுக்காக வீட்டில் வைத்திருக்கும் பொருட்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?… ஆம், அது உண்மை தான் என்கிறது ஜோதிடம். படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருட்கள் நமக்கு வாஸ்துப்படி பல தீமைகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அப்படி படுக்கையறையில் வைக்க கூடாத பொருட்கள் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

செல்லப் பிராணிகள் : நம்மில் பெரும்பாலானோர், நாம் வளர்க்கும் செல்லப் பிராணியை படுக்கையில் தூங்க அனுமதிப்போம். ஏனென்றால், அதை நாம் பிராணிகளாக பார்ப்பதில்லை. வீட்டில் இருக்கும் ஒரு நபராக பார்க்கிறோம். ஆனால், வாஸ்துப்படி அது தவறு என கூறப்படுகிறது. செல்லப்பிராணிகளை நாம் படுக்கை அறைக்குள் விடுவது, நமக்கு நோய் தொற்றுக்களை உண்டாக்குவதுடன் எதிர்மறையான எண்ணங்களையும் ஏற்படுத்தும்.

எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் : எங்கும் இல்லாத அளவுக்கு படுக்கை அறையில் தான் டிவி, மொபைல் போன், லேப்டாப், வாட்ச் மற்றும் ஸ்பீக்கர் என பல எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களை குவித்து வைத்திருப்போம். ஆனால், வாஸ்துப்படி மட்டும் அல்ல, அறிவியல் நீதியாகவும் அது நல்லதாக கருதப்படுவதில்லை. இது உங்கள் தூக்கத்தை பாதிப்பதுடன், பண இழப்புக்கு வழிவகுக்கும். இதனால், வாழ்க்கையில் மோசமான விளைவை சந்திக்க நேரிடும் என்கிறது ஜோதிடம்.

கழுவாத பாத்திரங்கள் : நம்மில் பலர் பால், காஃபி, டீ குடித்துவிட்டு அந்த கப்பை கழுவாமல் அப்படியே நமது படுக்கைக்கு அருகில் வைத்திருப்போம். அப்படி செய்வது வாஸ்துப்படி தவறான விஷயமாக கருதப்படுகிறது. ஏனென்றால், அது வறுமைக்கு வழிவகுக்குமாம். நாம்  தூங்கும் போது தீய கனவுகளுக்கு அவை வழிவகுக்கும் மற்றும் பொதுவாக வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.

Related Post

கொங்கு ஸ்டைலில் சுவையான கோழி குழம்பு எப்படி செய்வது.?

Posted by - March 9, 2024 0
 கொங்கு பாணியில் சுவையாக கோழி குழம்பு எப்படி செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள். வீட்டில் கோழி குழம்பு வைத்தால் சத்தமே இல்லாமல் தட்டு காலியாகிவிடும். குழந்தைகள் முதல்…

அரசியல் களத்தில் சிவகார்த்திகேயன்..

Posted by - June 12, 2024 0
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி…

தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

Posted by - April 17, 2025 0
பிரியங்கா தேஷ்பாண்டே பிரியங்கா தேஷ்பாண்டே, சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரைப்பற்றிய எந்த ஒரு அறிமுகமும் சொல்ல வேண்டியது இல்லை. எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் செம கலகலப்பாக…

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேறுகிறார் தெரியுமா.. இவர் தானா

Posted by - December 13, 2024 0
பிக் பாஸ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 8வது சீசன் விறுவிறுப்பின் உச்சமாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சாச்சனா…

டூத் பிரஷை மாதக்கணக்கில் உபயோகிப்பவரா நீங்கள்… இதை தெரிஞ்சிக்கோங்க

Posted by - September 15, 2025 0
பிரஷை நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் அதிலிருக்கும் இழைகள் அதன் வடிவத்தை இழந்துவிடும். குழந்தைகள் அதிக அழுத்தம் கொடுத்து பல் துலக்குவார்கள் என்பதால் அவர்களின் பிரஷ் இழைகள் வேகமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *