157 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை – அதிர்ச்சியளித்த 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

341 0

குஜராத் மாநிலத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் ஒட்டுமொத்தத்தில் 64.62 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். மாநிலத்தின் சூரத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். மிக குறைந்த தேர்ச்சி விகிதம் கொண்ட மாவட்டமாக தாஹோத் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமாக 40.5 சதவீதம் பேர் தான் தேர்ச்சி பெற்றனர். 272 பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 1084 பள்ளிகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பதிவாகி இருக்கிறது.NExT Exam (National Exit Test) for MBBS Students: Exam Dates, Pattern,  Marking Scheme

இதில் மிகவும் அதிர்ச்சிகர தகவல், 157 பள்ளிகளை சேர்ந்த மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. மறு தேர்வுக்கு விண்ணப்பித்த 1 லட்சத்து 65 ஆயிரத்து 690 மாணவர்களில் 27 ஆயிரத்து 446 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கிரேடு வாரியாக 6 ஆயிரத்து 111 மாணவர்கள் A1 கிரேடிலும், 44 ஆயிரத்து 480 மாணவர்கள் A2 கிரேடிலும், 1 லட்சத்து 27 ஆயிரத்து 652 மாணவர்கள் B2 கிரேடிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநிலத்தின் தாய் மொழியான குஜராத்தியில் 96 ஆயிரம் மாணவர்களும், கணித பாடத்தில் 1 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களும் தோல்வி அடைந்தனர்.

Related Post

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

டெல்லி கார் வெடிப்பு – அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? சிக்கும் டாக்டர்கள் – ஷாக்கிங் அப்டேட்ஸ்

Posted by - November 11, 2025 0
Redfort Car Blast: டெல்லியில் நடந்த கார் வெடிப்பு அவசர தாக்குதலா? திட்டமிட்ட சதியா? என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. Redfort Car Blast: டெல்லியில் வெடித்த காரை…

ஆந்திராவில் ரூ.30 லட்சத்துக்கு தக்காளி விற்ற வியாபாரி கொலை

Posted by - July 13, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், மதனப்பள்ளி அருகே உள்ள போடிமல்லதின்னா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் ரெட்டி. இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு சந்தையில் விற்பனை செய்து…

பிக் பாஸில் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழையும் மியா கலிஃபா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Posted by - November 28, 2022 0
பிக் பாஸ் ஷோவுக்கு இந்தியாவில் எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஹிந்தி, தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *