மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில் மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி

206 0

லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் சந்திர சஹானி. போலீஸ் நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்த இவர் பண மூட்டைகளுடன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்பி சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த படத்தில் ரமேஷ் சந்திர சஹானியின் மனைவி மற்றும் குழந்தைகள் 500 ரூபாய் நோட்டு கட்டுகளுடன் போஸ் கொடுத்தவாறு இருந்தனர். இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பணக்குவியலுடன் செல்பி எடுத்து அதை வெளியிட்ட போலீஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.மனைவி, குழந்தைகளோடு 500 ரூபாய் நோட்டுகளுடன் செல்பி எடுத்து சிக்கலில்  மாட்டிக்கொண்ட போலீஸ் அதிகாரி | A police officer in Uttar Pradesh got into  trouble for taking a ...

இது தொடர்பான விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கின. இதையடுத்து அந்த போலீஸ்காரர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார். அப்போது அந்த போலீஸ் அதிகாரி தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்றதன்மூலம் கிடைத்த ரூ.14 லட்சம் பணம் என்று தெரிவித்தார். மேலும், அவர் தன்னை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துகளை விசாரணையின்போது தெரிவித்துள்ளார். அந்த படம் கடந்த 2021 நவம்பர் மாதம் 14-ந்தேதி எடுக்கப்பட்டது என்றும், அது முறைகேடாக சம்பாதித்த பணம் இல்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

ஆனாலும் பணக்குவியலுடன் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பது போன்ற படம் அவரது வேலைக்கும் வேட்டு வைத்துள்ளது. விசாரணை நிறைவில் போலீஸ் அதிகாரியான ரமேஷ் சந்திர சஹானி காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி ஒருவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில் போலீஸ்காரரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் நோட்டு மூட்டைகளுடன் உள்ளனர். இந்த விவகாரத்தை நாங்கள் கவனத்தில் கொண் டுள்ளோம், அந்த போலீஸ் காரர் காவல் துறையின் சாதாரண பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும்அவர் தெரிவித்துள்ளார்.

Related Post

புது ரூல்ஸ்.. CIBIL ஸ்கோர் விதிகளில் புது மாற்றம்.. தினமும் 100 ரூபாய் அபராதம்.. உடனே கவனியுங்க..

Posted by - December 6, 2024 0
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடன் தகவல் நிறுவனங்கள் தற்போது வங்கிகள் (bank) அல்லது ஃபைனான்சியல் நிறுவனங்கள் (non-banking finance companies – NBFC) வாடிக்கையாளர்களின் கடன்…

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

Posted by - October 30, 2023 0
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையம் உள்ளது. இங்கு ‘யெகோவாவின் சாட்சிகள்’ என்ற கிறிஸ்தவ சபையினரின் 3 நாள்…

தட்கல் டிக்கெட் முன்பதிவில் OTP கட்டாயம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

Posted by - December 25, 2025 0
இந்தியா ரயில்வே, தட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இனி தட்கல் டிக்கெட் புக் செய்யும் போது OTP (One…

PhonePe, அமேசான் பே இருக்கா.. அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை!

Posted by - November 25, 2024 0
இந்தியாவில் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) செயலிகளை மக்கள் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதாவது சிறிய பெட்டி கடைகள் முதல் பெரிய…

ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Posted by - August 21, 2023 0
புதுடெல்லி: தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *