உலகமெங்கும் ரீலிஸாக உள்ள ‘பார்பி’ திரைப்படத்துக்கு வியட்நாமில் மட்டும் தடை! ஏன்?

274 0
வார்னர் ப்ரோஸின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான பார்பி திரைப்படத்தை தங்கள் நாட்டில் திரையிடுவதற்கு வியட்நாம் அரசு தடை விதித்துள்ளது.

தென் சீனக் கடல் பகுதி முழுவதையும் சீனா உரிமை கோரிவருவதும் புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ச்சியாக நடந்துவரும் நிகழ்வுகள். அப்பகுதிகளை நைன் டேஸ் லைன் (nine dash line) என சீனா குறிப்பிடுகிறது.உலகமெங்கும் கொண்டாடப்படும் 'பார்பி' திரைப்படத்துக்கு வியட்நாமில் மட்டும் தடை!  ஏன்?| Barbie movie banned in Vietnam

மார்கோட் ராபி மற்றும் ரியான் கோஸ்லிங் நடித்த “பார்பி”, முதலில் ஜூலை 21 ஆம் தேதி வியட்நாமில் திரையிட திட்டமிடப்பட்டது. இந்நிலையில் சீனாவால் உரிமை கோரப்பட்ட நிலப்பரப்பைக் காட்டும் வரைபடத்தைக் கொண்ட ஒரு காட்சி வார்னர் பிரதர்ஸின் “பார்பி” திரைப்படத்தில் உள்ளதால் உள்நாட்டில் திரையிட வியட்நாம் தடை விதித்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஹேக் நகரில், சர்வதேச டிரிபியூனலில், 9 டேஸ் லைன் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளை சீனா உரிமை கோருவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்பின் 2019 ஆம் ஆண்டில், வியட்நாம் அரசு ட்ரீம்வொர்க்ஸின் அனிமேஷன் திரைப்படமான “அபோமினபிள்” மற்றும் கடந்த ஆண்டு சோனியின் அதிரடி திரைப்படமான “அன்சார்டர்ட்” ஆகியவையும் இதே காரணத்திற்காக தடைசெய்யப்பட்டிருந்தது.

வெளிநாட்டு படங்களுக்கு உரிமம் வழங்குதல் மற்றும் தணிக்கை செய்யும் துறையின் தலைவரான வி கெய்ன் தான் இது குறித்து கூறுகையில், “பார்பி என்ற அமெரிக்கத் திரைப்படத்தை வியட்நாமில் வெளியிட நாங்கள் உரிமம் வழங்கவில்லை. ஏனெனில் அப்படம் நைன் டேஸ் லைனின் புகைப்படத்தை கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

வியட்நாமும் சீனாவும் நீண்ட காலமாக தென் சீனக் கடலில் உரிமை கோரும் பகுதியில் மக்கள் வசிக்கவில்லை என்றாலும் தீவுகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கைவள ஆதாரங்கள் இருப்பதாக கருதப்படுகிறது

Related Post

தியேட்டரில் கூலி சேர் காலி… நாளுக்கு நாள் சரியும் வசூல் – 4 நாள் எவ்வளவு?

Posted by - August 18, 2025 0
நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படத்தின் 4 நாள் வசூல் எவ்வளவு? என்பதை கீழே காணலாம். நடிகர் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி ரிலீசானது. லோகேஷ்…

வேட்டையன் திரைவிமர்சனம்…

Posted by - October 10, 2024 0
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் TJ ஞானவேல் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் வேட்டையன். ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின்…

1999ஆம் ஆண்டு படையப்பா படம் செய்த வசூல்..

Posted by - December 11, 2025 0
படையப்பா தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பங்காற்றிய நடிகர்களில் ஒருவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதற்காக சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர்…

சந்திரமுகி 2- கங்கனா ரணாவத்.? அவரோட ரோல்..

Posted by - November 30, 2022 0
இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக…

10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 19, 2023 0
போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *