500 ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு விற்பனை: தக்காளி வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

232 0

சென்னை:

அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், தென்மேற்கு பருவமழை காரணமாக தக்காளி பயிரிடுவது பாதிக்கப்பட்டதாலும், ஜூன் மாத இறுதியில் வெளிச்சந்தையில் தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் ரூ.120 வரை உயர்ந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கூட்டுறவுத்துறையின் கீழ் சென்னையில் செயல்படும் 27 பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் 2 நகரும் பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.Ration shops sell tomatoes for Rs.60 | ரேஷன் கடைகளில் ரூ.60-க்கு தக்காளி  விற்பனை

சென்னையில் முதற்கட்டமாக வடசென்னையில் 32 ரேஷன் கடைகளிலும் மத்திய மற்றும் தென் சென்னையில் தலா 25 ரேஷன் கடைகள் என மொத்தம் 82 கடைகளிலும், மாநிலத்தில் பிற பகுதிகளில் 215 கடைகள் என மொத்தம் 302 ரேஷன் கடைகள் மூலம் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைகளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டு, இன்று முதல் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 67 பண்ணை பசுமைக்கடைகள், 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வரை 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 500 ஆக உயர்ந்துள்ளது. நபர் ஒருவருக்கு 1 கிலோ தக்காளி மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.200க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சென்னையில் மலிவு விலையில் தக்காளி வாங்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்து வாங்கி சென்றனர்.

Related Post

அனிருத் முதல் மணிகண்டன் வரை! கலைமாமணி விருதுகள் 2021-2023 யார் யாருக்கு விருதுகள்?

Posted by - September 24, 2025 0
 கடந்த மூன்று ஆண்டுகளாக கலைமாமணி விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்பொது 2021, 2022, 2023 ஆம் ஆண்டுக்கான விருதுகள் …. 2021, 2022, 2023ம் ஆண்டுகளுக்கான…

சதுரங்கவேட்டை சினிமா பாணியில் இரிடியம் கண்டுபிடிக்கும் ‘ரைஸ் புல்லிங் எந்திரம்’ என கூறி மோசடி-2 பேர் கைது

Posted by - August 2, 2023 0
வந்தவாசி: விழுப்புரம் மாவட்டம் நாப்பாளையத்தை சேர்ந்தவர் சங்கர்கணேஷ். வியாபாரியான இவர் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளி ஆனார். இதையடுத்து நண்பர் மூலமாக ரைஸ் புல்லிங் எந்திரம் வாங்கி…

கருணாநிதி கைது விவகாரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்!

Posted by - November 23, 2023 0
திருவனந்தபுரம்: தமிழ்நாடு முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி (வயது 96) முதுமை காரணமாக கேரளாவில் இன்று காலமானார். நாட்டின் உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்ட பெருமைக்குரியவர்…

தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை… வானிலை மையம் அப்டேட் !

Posted by - May 15, 2024 0
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் திண்டுக்கல், தேனி,…

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *