“ராசியில்லாத நடிகை என குத்தப்பட்ட முத்திரை! கீர்த்தி சுரேஷின் வேதனை கருத்து!”

420 0

நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களையும் விட்டு வைப்பதில்லை. ஆரம்பத்தில் ஹோம்லி கேரக்டர்களில் மட்டுமே நடித்துவந்த கீர்த்தி சுரேஷை கிளாமர் கேரக்டர்களிலும் பார்க்க முடிகிறது. தொடர்ந்து பொது நிகழ்ச்சிகளிலும் இவர் அதீத கவர்ச்சியுடன் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

 

சமீபத்தில் தமிழில் உதயநிதியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த மாமன்னன் படம் வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷின் கேரக்டரும் கவனம் பெற்றது. படம் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ள நிலையில் தமிழில் அடுத்தடுத்து ரகு தாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகையாக நடித்துவரும் கீர்த்தி, அடுத்ததாக பாலிவுட்டிலும் நடிக்கவுள்ளார். வருண் தவானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படத்தின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.

 

 

இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை அட்லீ தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. நீண்ட காலங்களாகவே கீர்த்தி சுரேஷிற்கு பாலிவுட்டிலிருந்து வாய்ப்புகள் வந்த நிலையில், அவற்றில் அவர் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது VD18 படத்தில் இணைந்துள்ளார். அடுத்ததாக வரும் 11ம் தேதி சிரஞ்சீவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள போலா சங்கர் படம் வெளியாகவுள்ளது. தமிழில் அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் ரீமேக்கான இந்தப் படத்தின் ப்ரமோஷன்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

 

 

படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் நடந்த நிலையில், நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பங்கேற்ற கெட்டப், அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. துவக்கத்தில் சிறப்பான பல படங்களை தேர்ந்தெடுத்து நடித்த கீர்த்தி சுரேஷ் மீது ஒரு கட்டத்தில் ராசியில்லாத நடிகை என்ற முத்திரை விழுந்தது. இதுகுறித்து கீர்த்தி தனது சமீபத்திய பேட்டியில், தான் நடித்தால், அந்தப் படம் பாதியிலேயே நின்றுவிடும் என்றும் கூறப்பட்டதாகவும் கடினமாக உழைத்துதான் தான் இவற்றையெல்லாம் கடந்து வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.

Related Post

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

Posted by - August 24, 2023 0
துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை…

ரவீந்தர்-மகாலட்சுமி ’வீட்ல விசேஷம்’.. வைரல் வீடியோ..!

Posted by - March 15, 2023 0
பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் தொலைக்காட்சி நடிகை மகாலட்சுமி ஆகிய இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர் என்பதும் திருப்பதியில் நடந்த இந்த…

ஜனநாயகன் சாட்டிலைட் உரிமை குறித்து வெளிவந்த ஷாக்கிங் தகவல்.. என்ன தெரியுமா

Posted by - August 26, 2025 0
ஜனநாயகன் நடிகர் விஜய்யின் படம் என்றால் ரிலீஸுக்கு பல மாதங்களுக்கு முன்பே அனைத்து பிசினஸ் நடைபெற்று முடிந்துவிடும். இன்னும் சொல்லப்போனால் பூஜை போடும்போதே படத்தில் சில முக்கிய உரிமைகளை…

‘பகாசூரன்’ விமர்சனம்: ‘யாரோடும் ஒப்பிடாதீங்க…’ இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

Posted by - February 18, 2023 0
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி…

வேலை கையிலெடுத்த சிவகார்த்திகேயன்…

Posted by - February 16, 2026 0
சிவகார்த்திகேயனின் 26 ஆவது படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது அமரன் படத்தைத் தொடர்ந்து கமல் தயாரிப்பில் நடிக்க இருக்கும் இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *