தங்கப் புதையலை சென்னையில் விற்று உல்லாசமாக வாழ்ந்த 3 பேர் கைது- 499 தங்க நாணயங்கள், ரூ.14 லட்சம் பறிமுதல்

224 0

திருப்பதி:

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் சித்தே பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் அஜித், அமரன், வருண் இவர்கள் கடந்த மே மாதம் அதே கிராமத்தில் உள்ள மலை பகுதியில் தேன் எடுக்க சென்றனர். அவர்களுடன் அதே ஊரை சேர்ந்த சுப்பிர மணியம், வெங்கடேஸ்வரன் ஆகியோரும் சென்றனர்.

அங்குள்ள கம்மா கோவில் அருகே பாறைகளில் தேன்கூடு உள்ளதா என தேடி பார்த்தனர். அப்போது ஒரு பெரிய பாறைக்கு அடியில் பித்தளை சொம்பு ஒன்று கிடைத்தது. அதை உடைத்த போது அதில் மண் கலந்த தங்க காசுகள் இருந்தன. அதனை கண்டதும் அவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். சொம்பில் இருந்தது தங்கப் புதையல் என்பதை அவர்கள் ஊர்ஜிதம் செய்தனர். உறவினர்களான அஜித், அமரன், வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து தங்க நாணயங்களை எடுத்துக்கொண்டு காலி சொம்பை ஏரியில் வீசினர்.தங்க புதையல் இருக்கு..! தொழிலதிபரை ஏமாற்றி மஞ்ச குளித்த ஜோசியர் கைது!

மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என வருணையும், சுப்பிரமணியத்தையும் மிரட்டினர். இதற்கிடையில் வருண் தங்க காசுகளை தெரியாமல் செல்போனில் போட்டோ எடுத்துக் கொண்டார். இதையடுத்து அஜித், அமரன் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தங்க நாணயங்களை சென்னைக்கு கொண்டு சென்றனர். அங்கு பல லட்சம் ரூபாய்க்கு தங்க காசுகளை விற்பனை செய்து பணத்தை பெற்றனர் அதில் சுமார் 770 கிராம் தங்கத்தை உருக்கி நகைகள் செய்து கொண்டனர். தங்கத்தை விற்பனை செய்த ரூ.4 லட்சம் பணத்தில் பழைய சொகுசு கார் மற்றும் ஆட்டோ வாங்கினர். மேலும் தனது சகோதரி மகளிர் குழு மூலம் வாங்கிய ஒரு லட்சம் கடனை அடைத்தனர்.

தொடர்ந்து 3 பேரும் உல்லாசமாக வாழ தொடங்கினர். புதையல் மூலம் கிடைத்த பணத்தில் தனக்கு பங்கு கிடைக்காததால் வருண் ஆத்திரம் அடைந்தார். மேலும் அவர்களை காட்டி கொடுக்க முடிவு செய்தார். தனது செல்போனில் வைத்திருந்த தங்கக் காசுகள் படத்தை அவரது சகோதரியிடம் காண்பித்தார். மேலும் இது குறித்து நெல்லூர் மாவட்ட கலெக்டரிடம் புகைப்படத்துடன் கூடிய ஆதாரத்துடன் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து புதையலாக கிடைத்த பொருட்களை மீட்க உத்தரவிடப்பட்டது.

போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித், அமரன், வெங்கடேஸ்வரன் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் புதையலில் இருந்த தங்க காசுகளை விற்பனை செய்ததும் நகைகளாக மாற்றி வைத்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து சென்னையில் விற்கப்பட்ட தங்க நாணயங்கள் மற்றும் ரூ. 14 லட்சம் பணம், 21 பவுன் தங்கம் அவர்கள் பதுக்கி வைத்திருந்த 436 சிறிய தங்க நாணயங்கள் 63 பெரிய தங்க நாணயங்கள், ஒரு சொகுசுகார் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post

இரக்கமின்றி பிஞ்சு மகனை பெண் தொழில் அதிபர் கொன்றது எப்படி?: போலீஸ் வெளியிட்ட திடுக் தகவல்கள்

Posted by - January 11, 2024 0
பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்தபுரம் ரெசிடன்சி ரோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சுசனா சேத் (வயது 39). இவரது கணவர் வெங்கட்ராமன். இவர்கள் இருவரும்…

பட்டையைக் கிளப்பும் ஜியோ.. வெறும் 11 ரூபாய்க்கு 10 ஜிபி டேட்டா இலவசம்.. ஆனால் ஒரு கண்டிஷன்

Posted by - December 6, 2024 0
#jio #india #reliance #mukeshambani #reliancejio #ambani #airtel #nitaambani #akashambani #ishaambani #dhirubhaiambani #anantambani #radhikamerchant #shlokamehta #ambaniwedding #kokilabenambani #antilia #ambanifamily #reliancefoundation #neetaambani…

காதலியின் கணவரை கொன்று 6 துண்டாக வெட்டி புதைத்த கள்ளக்காதலன் கைது

Posted by - July 19, 2023 0
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியைச் சேர்ந்தவர் மிஸ்ரலால் மேக்வால் மகன் ஜோகேந்திரா (வயது 33). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து…

கல்யாண வெங்கடேஸ்வரர் கோவிலில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி: புஷ்கரணியில் பக்தர்கள் புனித நீராடினர்

Posted by - February 20, 2023 0
திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரம் கல்யாணவெங்கடேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, இரவில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரர் தனித்தும், உபய நாச்சியார்களுடன்…

அதிமுகவில் மீண்டும் வெடிக்குமா உட்கட்சி பூசல்… முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு…

Posted by - February 12, 2025 0
அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதால், மீண்டும் உட்கட்சி பூசல் வெடிக்குமா என்ற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *