டாக்டர்.ராதாகிருஷ்ணன் படித்த பள்ளியில் இடியும் நிலையில் கட்டிடங்கள்- ஆசிரியர் தினம் கொண்டாடும் நிலையில் அவலம்

197 0

ராணிப்பேட்டை:

முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார். அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார். டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.இப்படி ஒரு வாத்தியார் இனி நமக்கு கிடைப்பாரா? | Dr. Radhakrishnan's birthday  Teacher's Day - Tamil Oneindia

இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது . இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர். இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன . மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.

கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர். தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன. ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது. நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர். இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Post

ஜோதிடம் பலிக்காததால் ஆத்திரம் : ஜோதிடரை கொலை செய்த வழக்கில் பெண்மணி உட்பட இருவர் கைது

Posted by - January 19, 2025 0
ஜோதிடர் ஜான் ஸ்டீபன் கொலை வழக்கில் கட்டிமாங்காடு பகுதியைச் சேர்ந்த கலையரசி மற்றும் நெல்லை கருங்குளத்தை சேர்ந்த நம்பிராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், திடுக்கிடும் தகவல்கள்…

அமோனியா வாயு கசிவு விவகாரம்… அறிக்கை வெளியிட்ட நிறுவனம்

Posted by - December 27, 2023 0
சென்னை: சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் உள்ள தனியார் உர தொழிற்சாலையில் இருந்து கடலுக்கடியில் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நள்ளிரவில் திடீரென அமோனியம் வாயு…

கும்பகோணம் மேற்கு காவல் நிலையம் இந்தியாவில் முன்மாதிரி கல்விக்கூடமாக மாறியது

Posted by - December 20, 2025 0
கும்பகோணம் மேற்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் திரு. ரமேஷ் தனது முயற்சியால் நூலகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை உருவாக்கி, காவல் நிலையத்தை மாணவர்களுக்கு முன்னேற்றக் கூடமாக மாற்றியுள்ளார்.…

TVK கட்சிக்கு அஜித் ஆதரவா? Race Car – ஒரே Colour -ல இருக்கே! குழப்பத்தில் நெட்டிசன்ஸ்!

Posted by - November 28, 2024 0
அஜித்தும், விஜயும் சினிமாவுல அறிமுகமாகி கிட்டத்தட்ட 30 வருஷத்துக்கு மேல ஆகிருச்சு. ஆரம்பத்தில அஜித் – விஜய் – பிரசாந்த் என மூனுபேருக்கும் போட்டி இருந்துச்சு. அப்புறம்…

சென்னை மக்களை வாட்டி எடுக்கும் புதுவித வைரஸ் காய்ச்சல்

Posted by - February 22, 2023 0
சென்னை: சென்னை மக்களை வைரஸ் காய்ச்சல் ஒன்று பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சளி மற்றும் வரட்டு இருமலில் தொடங்கும் இந்த காய்ச்சல் கடுமையான உடல் வலியையும் கூடவே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *