கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

193 0

புதுடெல்லி:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்கும் என தெரிகிறது. இந்தியா அதன் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் 85 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. தினமும் ரஷியாவில் இருந்து 3 லட்சம் பேரல்கள், சவூதி அரேபிய நாடுகளில் இருந்து 10 லட்சம் பேரல்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. டிசம்பர் இறுதி வரை உலக சந்தையில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பேரல்கள் விநியோகத்தை குறைக்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. இதனால் கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை 6.5 சதவீதம் உயர்ந்துள்ளது.மறுபடியுமா.. அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை! பெட்ரோல், டீசல் விலை உயர  வாய்ப்பு! | Crude oil breaches $120 a barrel as petrol and diesel prices  soar - Tamil Oneindia

இதை தொடர்ந்து இந்த ஆண்டு முதல் முறையாக ஒரு பேரல் உயர்ந்து பேரலுக்கு 89.67 டாலராக அதிகரிக்கப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 17 மாதங்களாக மாற்றமின்றி ஒரே விலையில் நீடிக்கிறது. சில்லரை விற்பனையாளர்கள், சர்வதேச எரிபொருள் விலையின் 15 நாள் சுழற்சி அடிப்படையில் தினசரி எரிபொருள் விலையை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந்தேதி முதல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போதுள்ள சூழலால் எண்ணெய் நிறுவனங்கள், 15 நாட்கள் சராசரி சந்தை நிலவரத்தை பொறுத்து தினமும் விலையை மாற்றி அமைக்க வேண்டியது என்பது தவிர்க்க இயலாததாக ஆகி உள்ளது. சந்தை அடிப்படையிலான விலை நிர்ணயம் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையும் என்ற நம்பிக்கை மீண்டும் ஏற்பட்டது.

ஆனால் ஜூலை மாதம் விலை பீப்பாய் ஒன்றுக்கு 80.37 அமெரிக்க டாலராகவும், தற்போது 90 டாலராகவும் உயர்ந்துள்ளது. கடந்த மே மாதம், சர்வதேச எண்ணெய் விலை மற்றும் சில்லரை விற்பனை விகிதங்கள் சமமாக வந்துள்ளன. ஆனால் இப்போது விலைகள் உயர்வதால், பெட்ரோல், டீசல் விலை மீண்டும் அதிகரிக்கும் நிலை உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை 80 சதவீத வாகனங்கள் பெட்ரோல், டீசலில் இயங்கி வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் விலை மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. அதேபோல் எரிபொருட்களின் விலை உயர்வு என்பது அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் மீதான விலை உயர்வில் மிகப்பெரிய அளவில் பிரதிபலிக்கும். எனவே சாமானிய மக்களும் எரிபொருள் விலை நிலவரத்தை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறார்கள்.

இதுபற்றி பெட்ரோல், டீசல் வினியோகஸ்தர்கள் கூறுகையில், கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசு பொதுமக்களுக்கு விலை ஏற்ற, இறக்கங்களால், பாதிப்பு ஏற்படாமல் இருக்க கலால் வரியை குறைத்தது. கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வை சந்தித்த போதும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. இதனால் அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. அதை ஈடுகட்ட உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிவை கண்டபோது விலையை குறைக்காமல் இருந்தன. தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் இம்முறையும் விலையை குறைக்க வாய்ப்பு இல்லை என்றனர். சென்னையில் இன்று 474-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் ரூ.94.24-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Related Post

லாட்ஜிக்கு நம்பி சென்றதால் விபரீதம்: காதலன், நண்பன் பலாத்காரம் செய்ததால் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை

Posted by - July 24, 2023 0
திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், பால் மேரு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து…

அதள பாதாளத்தில் பங்குச் சந்தை.. மாஸ் காட்டிய ஐடி பங்குகள்!

Posted by - August 3, 2024 0
மிகவும் மோசமான உலகளாவிய குறிப்புகளுக்கு மத்தியில் இன்று பங்குச் சந்தை பெரிய சரிவை செய்துள்ளது. நாளின் முடிவில் சென்செக்ஸ்-நிஃப்டி ஒவ்வொன்றும் 1%க்கும் அதிகமாக சரிந்தன. ஐடி மற்றும்…

மத்திய பிரதேசத்தில் மனைவிகளுக்கிடையே தகராறில் கணவர் மீது துப்பாக்கி சூடு

Posted by - February 20, 2023 0
போபால் மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரை சேர்ந்தவர் தாகர்கான். இவருக்கு அஞ்சும், ஹூமாகான் என்ற 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவி அஞ்சும் என்பவருடன்…

கருணாநிதி, எம்.ஜி.ஆர் வணங்கிய டி.ஆர்.எஸ்! – மார்டன் தியேட்டர்ஸின் கதை

Posted by - December 15, 2023 0
சினிமா தயாரிப்பு தொழிலில் கொல்கத்தாதான் கோலோச்சிக்கொண்டிருந்தது. சினிமா தயாரிப்பு தொடர்பான எல்லா வேலைகளுக்கும் கொல்கத்தா செல்ல வேண்டியிருந்தது. அதற்கு மாற்றாக சேலத்திலேயே ஒரு ஸ்டூடியோ தொடங்கினால் என்ன?…

8 மாதங்களில் இல்லாத அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது

Posted by - April 13, 2023 0
புதுடெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 223 நாட்களில் இல்லாத அளவில் நேற்று பாதிப்பு 7.830 ஆக உயர்ந்திருந்தது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *