கார்த்தியுடன் மோதும் விக்ரம்.. எதற்கு தெரியுமா?

360 0

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது.போட்டினு வந்துட்டா நண்பனாவது மண்ணாங்கட்டியாவது – கரிகாலனோடு நேரடியாக மோதும்  வந்தியத்தேவன் - CineReporters சமீபத்தில் இப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தை தீபாவளியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தீபாவளியன்று கார்த்தி நடித்திருக்கும் ‘ஜப்பான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

ரீ-ரிலீஸாகும் கில்லி

Posted by - February 18, 2026 0
கில்லி இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளிவந்த படம் கில்லி. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர்…

10 நாட்களில் போர் தொழில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 19, 2023 0
போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் முதல் முறையாக சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்த திரைப்படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் கதைக்களம் உருவாகி வெளிவந்த…

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இந்த வாரம் பிஸ்தா!

Posted by - December 17, 2022 0
கும்பகோணத்தில் உள்ள கிராமப்புற சூழலை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படம் ஃபன் மற்றும் நகைச்சுவையாக இருக்கும். உலக தொலைக்காட்சியில் முதல் முறையாக ஃபன் கலந்த நகைச்சுவை திரைப்படமான பிஸ்தா…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *