#Rain | #RainAlert | #ChennaiRains | #Weather | #pixeltv | #pixelmedia
தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்ககடல் பகுதியில் வரும் 30ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது. இதனையடுத்து தென்னிந்தியாவில் இன்று மற்றும் வரும் 28, 29 ஆம் தேதிகளில் கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஆங்காங்கே பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று ஒரு சில மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.