178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம்

231 0

வாஷிங்டன்:

சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும் போது கிரகணம் ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த சமயத்தில் சூரியனின் ஒளியை சந்திரன் மறைக்கும். பூமியை பொருத்தவரை ஓர் ஆண்டில் 2 முதல் 5 சூரிய கிரகணங்கள் நிகழக்கூடும்.

இந்நிலையில் இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது. 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் நிகழ்கிறது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. இரவு நேரம் என்பதால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது.மகாளய அமாவாசை நாளில் நிகழும் சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா? பரிகாரம்  யாருக்கு? | Solar eclipse on Mahalaya Amavasai day 14th October 2023 What  is the remedies - Tamil Oneindia

இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் என்றும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியில் இருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. இது சூரியனை முழுமையாக மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும்.

அமெரிக்காவின் வானிலை ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை தினத்தில் கிரகணம் ஏற்படுவது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 178 ஆண்டுகளுக்கு பிறகு மகாள அமாவாசை தினத்தில் இந்த அரிய கிரகணம் ஏற்படுவதால் இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது நல்லது. பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து வருகிற 28-ந்தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28- ந்தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி மறுநாள் 29- ந்தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. இதன் காரணமாக சந்திர கிரகணத்தை இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

ஜப்பானில் விசித்திர நிகழ்வு- தீவு முழுவதும் சூழ்ந்த ஆயிரக்கணக்கான காகங்கள்: இயற்கை பேரழிவுக்கான அறிகுறியா?

Posted by - February 16, 2023 0
டோக்கியோ: ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், சாலைகள்…

நாடு முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

Posted by - December 25, 2023 0
நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் திரளானோர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில்…

பாகிஸ்தானுக்கு வந்த அவமானம் – ஷபாஸ் செரீஃப் முன்பே, சீனா செய்த சம்பவம், இந்தியா ராக்ஸ்..

Posted by - September 1, 2025 0
பாகிஸ்தான் பிரதமர் முன்னிலையிலேயே ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பஹல்காம் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. SCO Summit 2025: பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இரங்கல்…

ஹமாஸ்- இஸ்ரேல் போர்: காசாவில் உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது

Posted by - November 7, 2023 0
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான வகையில் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. ஐ.நா. பொதுச்சபையில் போர்…

இடைக்கால போர் நிறுத்தம் தொடர்கிறது: இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

Posted by - November 30, 2023 0
ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கத்தார், எகிப்பு, அமெரிக்கா ஆகிய நாடுகள் பிணைக்கைதிகளை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *