தேடி அலையும் கதாபாத்திரங்கள் வரவில்லை என்பதுதான் கஷ்டம்- விக்ரம்

306 0

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்ததையடுத்து இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தில் டீசர் நேற்று வெளியானது.சார்பட்டாவை விட 100 மடங்கு சிறப்பான மேக்கிங்” - பா.ரஞ்சித்தை பாராட்டிய  விக்ரம் | actor Vikram Speech about pa ranjith at Thangalaan teaser Launch  - hindutamil.in

‘தங்கலான்’ டீசர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் விக்ரம் பேசியதாவது, ‘பிதாமகன்’, ‘ஐ’, ‘இராவணன்’ போன்ற படங்கள் நான் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த படங்கள். ஆனா, தங்கலானுடன் ஒப்பிடும் போது அதலாம் மூன்று சதவீதம் கூட இல்லை. இது உடல் ரீதியாகவும் மன ரீதியகவும் கஷ்டப்பட வேண்டும். ஒவ்வொரு காட்சியும் கஷ்டமாக தான் இருந்தது. காதல் கூட வெறித்தனமான காதலாக தான் இருக்கும்.

இந்த மாதிரி தேடி தேடி அலையும் சில கதாபாத்திரங்கள் என்னை தேடி வரவில்லை என்பது தான் மிகப்பெரிய கஷ்டம். இந்த படம் குறித்து இரஞ்சித் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆர்வமாக இருந்தது. இந்த படம் எங்களுடைய வாழ்க்கையின் சிறந்த படமாக இருக்கும்.

Related Post

RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால்

Posted by - March 14, 2023 0
ஆஸ்கர் விருது வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல். ராஜமௌலி இயக்கிய இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு…

சுந்தர் சி வடிவேலு காம்போ இஸ் பேக்…கவலை மறந்து சிரிக்க வைக்கும் கேங்கர்ஸ்…முழு விமர்சனம் இதோ

Posted by - April 24, 2025 0
சுந்தர் சி , வடிவேலு நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் கேங்கர்ஸ் படத்தின் முழு விமர்சனம் இதோ கேங்கர்ஸ் சுந்தர் இயக்கி வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள…

வைரலாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் புதிய போஸ்டர்

Posted by - February 20, 2023 0
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள்,…

வெளிநாட்டில் அநியாயமாய் இறந்து போன மயிலு.. அதிர்ச்சியை கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Posted by - April 10, 2023 0
எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மயிலு என்ற கேரக்டர் தான் ஸ்ரீதேவியின் அடையாளமாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடி கட்டி பறந்த…

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்!

Posted by - December 9, 2022 0
இந்த ஆண்டில் youtube-ல் பிரபலமான இந்திய பாடல்களில் விஜய் பட பாடல் இடம்பிடித்துள்ளது. இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தாலும் மக்களிடத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *