குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். திண்டுக்கல்: தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரான ஐ.பெரியசாமி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அமைச்சரவையில் முப்பெருந்துறையில் அமைச்சராக பதவி வகித்தார்.
தற்போது கூட்டுறவுத்துறை அவருக்கு ஒதுக்கப்பட்டது. ஐ.பெரியசாமியின் மகன் செந்தில்குமார் பழனி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். அண்மையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கூட்டுறவுத்துறை குறித்து சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டார். இதனையடுத்து ஐ.பெரியசாமி கூட்டுறவுத்துறையில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்கமாக தெரிவித்தார். இதனையடுத்து இந்த மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதையும் படியுங்கள்: அ.தி.மு.க., ஓ.பி.எஸ். அணியின் திருப்பூர் மாவட்ட செயலாளர்கள் நியமனம் பெரும்பாலான அமைச்சர்கள் ஐ.பெரியசாமியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மருமகளும், செந்தில்குமாரின் மனைவியுமான மெர்சி செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக பதிவு செய்த கருத்துகள் கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெர்சி செந்தில்குமார். அதில் உதயநிதி ஸ்டாலின் குறித்து எந்த கருத்துகள் தெரிவித்தாலும் புன்னகையோடு கடந்து செல்வார். எந்தவித பந்தா இல்லாத மிக எளிமையான மனிதர். உங்களை போலவே உங்கள் மனைவியும் மிகவும் எளிமையானவர். திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு வரும்போதெல்லாம் உங்களுடன் புகைப்படம் எடுக்க ஆசையாக ஓடி வருவோம். அப்போது அன்புடன் அழைத்து உபசரிப்பீர்கள். எங்கள் மகனுக்கு ஆதவன் என தலைவர் பெயர் சூட்டினார்.
ஆதவன் சென்னைக்கு வருவதே உங்களை பார்க்கத்தான், கொரோனா காலத்தின்போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும், தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான். குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். நீங்கள் தமிழகத்தின் மந்திரியாக வரும் காலத்தில் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை கட்சியினர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Related Post
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: யாரெல்லம் தகுதியானவர்கள்; விண்ணப்பிப்பது எப்படி… முழு விவரம்!
ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித…
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் பரவும் புதிய வகை கொரோனா ஜே.என்.1.. பரபரக்கும் ஆய்வுகள்!
சென்னை: தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புதுவகை கொரோனா ஜே.என்.1 உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்தியாவில் ஜே.என். 1…
ரூ. 2000 கோடியை முதலீடு செய்துள்ள உதயநிதி ஸ்டாலின்.. எதில் தெரியுமா
இந்த தகவலை மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர். அதுமட்டுமின்றி விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் என…
3 பேரை திருமணம் செய்து மோசடி.எஸ்கேப்.. சிக்கிய கல்யாண ராணி..!
2 குழந்தைகளுக்கு தாயானவர் புதுமணப் பெண் எனக் கூறி பல திருமணங்களை செய்து மோசடி செய்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபாளையம்,…
தி.மலையில் 7 உயிரை காவு வாங்கிய சோகம் – திக் திக் நொடிகள்.. நடந்தது என்ன?
இந்நிலையில் நேற்று காலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்பு பணிகளில் தீவிரமாக இறங்கினர். அவ்வப்போது…
Categories
- MEMES (12)
- அரசியல் (184)
- இந்தியா (468)
- உலகம் (173)
- சினிமா (812)
- தமிழ்நாடு (1,085)
- தமிழ்நாடு தேர்தல் 2026 (255)
- பொழுதுபோக்கு (698)
- விளையாட்டு (84)
Recent Posts
- ஜோசியமா? பழைய கர்மாவா? – அண்ணாமலை – மோடிக்கே கல்தா ஏன்?

- 500 சவரன் தங்கம், வெள்ளி, ரூ.537 கோடி பணம், கார்கள்… தவெக விஜய் சொத்து மதிப்பு தெரியுமா?

- நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

- “தவெக பிரச்சாரத்துக்கு முட்டுக்கட்டை போடுவது பாசிச தாக்குதல்” – விஜய் ஆவேசம்

- திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு

ஆதவன் சென்னைக்கு வருவதே உங்களை பார்க்கத்தான், கொரோனா காலத்தின்போதும் தான் சேர்த்த பணத்தை உங்கள் கையிலும், தலைவர் கையிலும் கொடுக்க வேண்டும் என அடம்பிடித்து சென்னை வந்தான். குழந்கைள் முதல் பெண்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் சக்தி எல்லோருக்கும் வாய்த்து விடாது. கட்சிக்காக கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த பதவியை விட மிகப்பெரிய பதவி வந்தே தீரும். நீங்கள் தமிழகத்தின் மந்திரியாக வரும் காலத்தில் முதல்-அமைச்சராக வரவேண்டும் என்பது ஒவ்வொரு தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை கட்சியினர் தங்களது வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.