மீந்து போன சாதம் இருக்கா? அப்ப 10 நிமிடத்துல இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல் செய்யுங்க..

188 0

தினமும் காலை இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, உப்புமா என்று சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான காலை உணவை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் நெய் பத்தலை செய்யுங்கள்.

இந்த நெய் பத்தல் செய்வதற்கு மீந்து போன சாதம் இருந்தால் போதும். அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் பத்தலை செய்யலாம். இந்த பத்தலை கேரளாவில் காலை உணவாக கேரளா மக்கள் சாப்பிடுவார்கள். நீங்களும் இந்த பத்தலை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா?

உங்களுக்கு நெய் பத்தலை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெய் பத்தல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.மீந்து போன சாதம் இருக்கா? அப்ப 10 நிமிடத்துல இந்த கேரளா ஸ்பெஷல் நெய் பத்தல்  செய்யுங்க.. | Simple Breakfast: Neypathal Recipe - Tamil BoldSky

தேவையான பொருட்கள்:

* மீந்து போன சாதம் – 1 கப்

* அரிசி மாவு – 1 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தேங்காய் – 1 1/2 கப் (துருவியது)

* உப்பு – சுவைக்கேற்ப

* தண்ணீர் – தேவையான அளவு

* சீரகம் – 2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

* நெய் – தேவையானஅளவு

செய்முறை:

* முதலில் சாதத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் அரிசி மாவை சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பின்பு அதில் தேங்காய், வெங்காயம், சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு பிசைந்த மாவை ஒரு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின் ஒரு வாழை இலையை எடுத்து, அதில் நெய் தடவி, இந்த உருண்டையை ஒவ்வொன்றாக வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் நன்கு சூடானதும், தட்டி வைத்துள்ள பத்தலைப் போட்டு, குறைவான தீயில் வைத்து, பொரித்து எடுக்க வேண்டும்.

* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான கேரளாக ஸ்டைல் பத்தல் தயார்.

Related Post

தினமும் நள்ளிரவிற்கு பின் தூங்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கா..? எதுக்கும் எச்சரிக்கையா இருங்க!

Posted by - February 28, 2024 0
தினமும் நள்ளிரவுக்கு பின் தூங்குவதை பழக்கமாக கொள்ளும் பொழுது நமது உடலின் இயற்கை சர்க்காரின் கடிகாரம் சீர்குலைக்கப்பட்டு, அதனால் ஹார்மோன் வெளியீடு, வளர்சிதை மாற்றம் மற்றும் உடல்…

சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும்… நெய்க்காரப்பட்டி ஸ்டைல் தயிர் குருமா

Posted by - September 2, 2023 0
இன்று இரவு வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சப்பாத்திக்கு இதுவரை வீட்டில் செய்யாத ஒரு வித்தியாசமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் நெய்க்காரப்பட்டி ஸ்டைல்…

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல்

Posted by - April 16, 2025 0
எதிர்நீச்சல் திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கம், பெண் அடிமை போன்ற விஷயங்கள் குறித்து பேசப்படும் தொடர், பெண்கள் எழுச்சியை…

இந்த விஷயங்களை எல்லாம் கூகுளில் தேடக்கூடாது.. மீறினால் தண்டனை நிச்சயம்

Posted by - March 1, 2023 0
நமது இணைய நடவடிக்கைகள் கண்காணிப்புக்கு உட்பட்டது என்பதால் கூகுளில் தேடக் கூடாத சில விஷயங்கள் என்ன என்பதை அறிவது அவசியம். வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்றாலும்…

சிங்கப்பெண்ணில் அன்பு மீதான காதலை உணர்ந்த ஆனந்தி.. சுயநல மிருகமாய் மகேஷ்!

Posted by - November 14, 2024 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *