ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு – 2024 செப்.30-க்குள் தேர்தலை நடத்த அறிவுறுத்தல்

266 0

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அங்கு வரும் 2024 செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று (டிச.11) தனது தீர்ப்பை வழங்கியது.

ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கவே சட்டப்பிரிவு 370 இருந்தது. இந்தியாவில் இருந்து அதனை பிரிப்பதற்காக அல்ல. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்வதற்கான அறிவிப்பை வெளியிடும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. இதற்காக அவர் சட்டப்பிரிவு 370(3)ஐ பயன்படுத்தியதில் தவறு இல்லை. குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியது செல்லுபடியாகும். சட்டப்பிரிவு 370(1)(d)-ன்படி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். ஜம்மு காஷ்மீர்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெறத் தேவையில்லை. சிறப்பு அந்தஸ்து ரத்து செல்லும்.

முன்னதாக தீர்ப்பு வெளியாவதை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியாக முன்னாள் முதல்வரும் பிடிபி கட்சியின் தலைவருமான மெஹபூபா முஃப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் முக்கியத் தலைவரும், முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா ஆகியோர் தாங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டதாகக் கூறினார். ஆனால் இதனை அரசுத் தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Post

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்

Posted by - April 12, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த…

Revolt EV Bike வாங்கலாமா? வேண்டாமா?

Posted by - December 23, 2025 0
Petrol விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்குற இந்த நேரத்துல, Electric Bike (EV Bike) வாங்கலாமா என்ற கேள்வி பலருக்கும் வருகிறது.இந்த EV bikes-ல அதிகம்…

குளிர்காலத்தில் ஹீட்டர இப்படி பயன்படுத்தி பாருங்க.. ஈபி பில் மிச்சமாகும்.!

Posted by - December 24, 2024 0
வீட்டில் மின்சாரம் பயன்படுத்தும் டிவைஸ்களை வாங்கும் போது, ​​அவற்றின் நட்சத்திர மதிப்பீட்டில் நாம் எப்போதும் கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஒரு எலெக்ட்ரிக் டிவைஸ்-இன் நட்சத்திர மதிப்பீடு…

அறிவுக்கரசி காதுக்கு வந்த ஷாக்கிங் தகவல், ஜீவானந்தம் போட்ட பிளான்- எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - September 23, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹிட்டான தொடர்களில் ஒன்றாக உள்ளது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல். தர்ஷனுக்கு யாருடன் திருமணம் நடக்கும் என்ற கதைக்களத்தை வைத்து கடந்த…

Bigg Boss Tamil Season 7: இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க்… கொண்டாட்டத்தில் ஹவுஸ்மேட்ஸ்!

Posted by - December 19, 2023 0
ஸ்மால் பாஸ் வீட்டிற்கு பூர்ணிமா, நிக்ஸன், மாயா, விஜய், அர்ச்சனா மற்றும் தினேஷ் ஆகியோர் அனுப்பப்பட்டனர். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் விசித்ரா, ரவீனா மற்றும் விக்ரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *