தீவுத்திடலில் விஜயகாந்த் உடல்… பொதுமக்கள் அஞ்சலி… மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்

234 0

தேமுதிக தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது வீட்டிற்கு நேரில் சென்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் கேயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

விஜயகாந்த் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சென்னை தீவுத்திடலில் ஏற்பாடு  | Vijayakanth body kept in island ground for public tribute tomorrow: DMDK  - hindutamil.in

அங்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினார். தொண்டர்கள், ரசிகர்கள் அதிக அளவில் கூடியாதால் தீவுத்திடலில் அவரது உடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி தேமுதிக தலைமையகத்தில் இருந்து அவரது உடல் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடியிருந்து அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 6 மணியளவில் தீவுத்திடல் கொண்டு வரப்பட்டு, விஜயகாந்த் உடல் அங்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணி வரை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். பின்னர் இறுதி ஊர்வலம் நடைபெறும். பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக இறுதி ஊர்வலம் தேமுதிக தலைமையகம் சென்றடைந்து, அங்கு மாலை 4.45 மணிக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Related Post

“அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா”- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

Posted by - May 28, 2023 0
25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம்…

“நான் முதலமைச்சராக இருக்கும் வரை இதற்கு அனுமதிக்க மாட்டேன்” – சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!

Posted by - December 9, 2024 0
அதையும் மீறி வந்தால் நான் முதலமைச்சர் பொறுப்பில் இருக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். தான் முதலமைச்சராக இருக்கும் வரையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அனுமதி…

BBTamil 8 Eviction: விஜய் சேதுபதியை காப்பாற்ற பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்? டபுள் எவிக்ஷனில் நடந்த ட்விஸ்ட்!

Posted by - December 9, 2024 0
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தமிழ் சீசன் 8: விஜய்…

சேற்றுப்புண் அல்ல.. கருப்பு பூஞ்சையை விட மோசமான பாக்டீரியா.. கொஞ்சம் ஏமாந்தால் கூட ஆளே காலிதான்!

Posted by - December 14, 2023 0
சென்னை: சென்னை பெரு வெள்ளம் ஏற்பட்டதை தொடர்ந்து மீலியாய்டோசிஸ் எனும் பாக்டீரியா அதிக அளவில் பரவி வருவதாக சிவகங்கை அரசு மருத்துவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..

Posted by - December 9, 2024 0
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே இன்று சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மீது திமுகவினர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *