விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் (Money Case) பூர்ணிமா ரவி வெளியேறி இருப்பது இன்றைய ப்ரோமோவில் தெளிவாக தெரிகிறது .
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்தை நெருங்கும் நிலையில் பணப்பெட்டி டாஸ்க் நடத்தப்படுவது வழக்கம் .
அந்த வகையில் இந்த சீசனிலும் இந்த வாரத்தில் பணப்பெட்டி பிக் பாஸ் வீட்டுக்குள் வைக்கப்பட்டது நாளுக்கு நாள் பண பெட்டியில் உள்ள பணம் அதிகரிக்க வந்தது .
பிக் பாஸ் குழு வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் பணப்பெட்டியில் உள்ள பணம் 16 லட்சமாக மாறியுள்ளது .
இதையடுத்து அனைவரும் வாழ்த்து சொல்லிய பூர்ணிமா அந்த பணப் பெட்டியை (Money Case) எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் இருக்க வீட்டில் இருந்து வெளியேறுவதற்கு முன் மாயா கண்ணீருடன் பூர்ணிமாவை கட்டியணைக்கிறார்.
இந்த பணப்பெட்டி டாஸ்க் வந்த நாள் முதல் போட்டியாளர்கள் மத்தியில் சில மாற்றங்கள் ஏற்பட மாயா பூர்ணிமா ஸ்கெட்ச் போட்டு இதனை செய்துள்ளது தெளிவாக தெரிகிறது.
சிலர் பூர்ணிமா இந்த பணப்பெட்டியை எடுக்காவிட்டால் இந்த வார எவிக்சனில் நிச்சயம் வெளியேறிருப்பார் என்றும் கருத்து கூறுகின்றனர்.
இதையடுத்து இனி வரும் நாட்கள் போட்டியாளர்களுக்கு சவால் நிறைந்த நாளாக தான் கடக்கபோகிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது .