பிக் பாஸில் இதுவரை நடக்காத நிகழ்வு.. போட்டியாளரை சொந்த குடும்பத்தினரே கழுவி ஊற்றிய மூவ்மெண்ட்.

171 0

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஒரு அரிதான நிகழ்வு ஒன்று நடைபெற்றிருக்கிறது. அதாவது இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் உறவினர்கள் அவர்களுக்கு உறுதுணையாக ஆதரவு தெரிவித்து வருவார்கள். ஆனால் இந்த சீசனில் ஒரு போட்டியாளர்கள் செய்த செயலை பார்த்து கடுப்பான அவருடைய சொந்த குடும்பத்தினரே அவரை திட்டி போஸ்ட் போட்டு இருக்கின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் மூலம் பிரபலமடைந்த சரவண விக்ரம் தான் இப்போது இந்த பிரச்சனையில் மாட்டி இருக்கிறார். அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா குரூப்பில் நீ சேராதே என்று பிக் பாஸ் வீட்டிற்குள்ளே வந்து சரவண விக்ரமனின் குடும்பத்தினர் அவருக்கு அட்வைஸ் செய்திருந்தனர். அதுபோல விக்ரம் எலிமினேஷன் ஆகி வெளியே வந்து நிகழ்ச்சியை பார்த்துவிட்டு மீண்டும் இப்போது ரீ-என்றியாக உள்ளே போனது மாயா கூட்டணியில் சேர்ந்து இருக்கிறார். இதனால் அதிருப்தியான அவருடைய சகோதரி நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.  அது போல மாயா விக்ரமோடு இருக்கும்போது ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தாலும் அவரை நேரடியாகவும் மறைமுகமாகவும் கரப்பான் பூச்சி என்று கலாய்த்து வருகிறார்.இதுகுறித்து கமல்ஹாசன் அனைவர் முன்பு அம்பல படுத்தியும் இருந்தார். இதனால் கோபமான சரவண விக்ரமின் உறவினர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஃப்ரீஸ் டாஸ்க்கில் செல்லும்போது சரவணனுக்கு அட்வைஸ் கொடுத்திருந்தனர். அப்போது கூட விக்ரமின் தங்கச்சி பூர்ணிமாவை கூட ஏற்றுக் கொள்வேன். ஆனால் அந்த மாயாவை ஏத்துக்கவே முடியாது. உன்னிடம் நல்லா பேசிட்டு உன் முதுகுக்கு பின்னாடி திட்டுறாங்க. யாரையும் நம்பாதே, யாருக்காகவும் விளையாடாத என்று அறிவுரை கூறியிருந்தார்.அதுபோல மாயாவிடம் நேரடியாகவே விக்ரம் உடைய அப்பா தன்னுடைய கோபத்தை காட்டி இருந்தார். மாயா நான் தப்பா எதுவும் விக்ரமை பேசவில்லை என்று சொல்வதற்கு நீ இதை கமல் சாரிடம் வேணா சொல்லு அவரு வேணா நம்புவாரு. நாங்க இந்த நிகழ்ச்சியை பார்த்துட்டு வந்து பேசுறோம் என்று அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பேசியிருந்தார். இப்படியான நிலையில் அதற்கு அடுத்த வாரமே விக்ரம் வெளியேறி இருந்தார். அப்போது கூட வெளியே போகும்போதும் விக்ரமின் சகோதரி சொன்ன வார்த்தையை வைத்து மாயா ஆட்டிட்யூட் காட்டி இருந்தார். இந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வந்தது. இந்த நிலையில் மீண்டும் விக்ரமுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்தில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. உள்ளே மாயாவிடம் தன்னுடைய அதிருப்தியை காட்டுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்தினருக்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் விக்ரம் மாயாவிடம் நடந்து கொண்டார். அதாவது வீட்டிற்குள் போனதும் விக்ரம் மாயாவிடம் நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் அது என்னன்னா “சாரி” என்று சொல்லி கட்டி பிடித்து மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். இந்த நிலையில் இதனால் கடுப்பான விக்ரமுடைய தங்கை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் உங்க சொந்த குடும்பத்தை விட மற்றவர்களுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தவறான வழியில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிவு வெளியிட்டிருக்கிறார். தற்போது இந்த பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதை பலர் பாராட்டியும் வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.Image

Related Post

தனது காதல் கணவரின் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை மகாலட்சுமி

Posted by - July 10, 2023 0
ரவீந்தர்-மகாலட்சுமி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் இப்போது முக்கிய ஜோடியாக அமைந்துவிட்டார்கள் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமி. இவர்கள்…

புது சீரியலை தொடங்கும் விஜய் டிவி! ப்ரோமோ இதோ

Posted by - August 16, 2024 0
விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகம் செய்து வருகின்றன. சன் டிவியில் அடுத்த வாரம் முதல் மூன்றும் முடிச்சு என்ற…

ரூ.18 லட்சம் பணப்பெட்டி உடன் வெளியேறிய போட்டியாளர்.. பிக் பாஸ் பைனலில் திருப்பம்

Posted by - January 9, 2026 0
பிக் பாஸ் 9ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. பாரு, கம்ருதீன் ரெட் கார்டு எலிமினேஷனுக்கு பிறகு பணப்பெட்டி டாஸ்குகள் தொடங்கிவிட்டது. வரிசையாக பணப்பெட்டிகள் வீட்டுக்குள் அனுப்பப்பட்டு…

முந்தானைமுடுச்சு பாக்யராஜ் கையில் இருக்கும் குழந்தை இந்த சீரியல் நடிகை தானா?

Posted by - March 4, 2023 0
முந்தானை முடிச்சு பாக்யராஜ் – ஊர்வசி நடிப்பில் 1983ல் வெளிவந்த படம் தான் முந்தானை முடிச்சு. மிக்பெரிய அளவில் அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. முந்தானை முடிச்சு…

சமூக ஊடகம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா?

Posted by - July 1, 2025 0
ஆக்கபூர்வமாக ஏதாவது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்வதாக இருந்தாலும் சரி, பொழுது போக்க ‘ஸ்க்ரால்’ செய்வதாக இருந்தாலும் சரி, எல்லாமே சமூக ஊடகமயமாக மாறி வருகிறது. செய்திகள், மீம்கள்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *