Gemini Generated Image ijuv8gijuv8gijuv e1775712729499

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

97 0

மேற்குவங்க வரலாற்றில் முதல்முறையாக 206 தொகுதிகளில் வரலாற்று வெற்றியை பெற்று பாஜக ஆட்சியை அமைக்கிறது.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

இதில், மொத்தம் 92.47 சதவிகித வாக்குகள் பதிவாகின. இரண்டாம் கட்டத்தில் நடைபெற்ற ஃபால்டா தொகுதியில் நடைபெற்ற முறைகேடு காரணமாக அங்கு வரும் 21-ம் தேதி மறு தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த சூழலில் 293 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.

148 தொகுதிகளில் வெற்றிபெறக்கூடிய கட்சி ஆட்சி அமைக்கும் எனும் நிலையில், பாஜக 206 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. 81 தொகுதிகளை கைப்பற்றியுள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியாக அமர உள்ளது.

Related Post

நெய் சுத்தமானதா..? கலப்படமானாதா..? எளிதில் கண்டறிய உதவும் டிப்ஸ் இதோ

Posted by - September 21, 2024 0
நெய்யில் உள்ள வைட்டமின் ஏ நமது கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நெய் உதவுகிறது. நெய்யில் ஒமேகா 3…

பள்ளி மாணவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ இளைஞர்! ஒருதலை காதலால் நேர்ந்த கொடூரம்

Posted by - December 9, 2024 0
பதினோராம் வகுப்பு படித்துவந்த மாணவியை ஒருதலையாய் காதலித்த நபர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றிருக்கிறார். ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், நந்திகொட்கூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவேந்திரா. இவருக்கு…
idfc bank

590 கோடி மோசடி: IDFC First Bank பங்கு 20% சரிவு – முதலீட்டாளர்களுக்கு ₹14,000 கோடி இழப்பு!

Posted by - February 25, 2026 0
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான IDFC First Bank பெரிய மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ளது. வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்ததாக கூறப்படும் ₹590 கோடி முறைகேடு…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை

Posted by - July 8, 2023 0
பெங்களூரு : பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *