tvk vck

பனையூரை நோக்கி மக்கள் நலக் கூட்டணி? சிக்னல் கொடுத்த காங்., திருமா, கம்யூ.,? விஜயின் அமைச்சரவை ரெடி?

90 0

TVK Vijay TN Election 2026: தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவளிக்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

TVK Vijay TN Election 2026: விஜய் ஆட்சி அமைக்க ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்களிக்கவும் தவெக தயாராக உள்ளதாம்.

தனிப்பெரும்பானமை பெறாத விஜய்..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் முடிவில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களிலும், ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 73 இடங்களிலும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதாவது தவெக தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தாலும், எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மைக்கான 118 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் விஜய் வேறு சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்க்கு ஆதரவளிக்கப் போகும் எம்.எல்.ஏக்கள் யார்? எந்த கட்சியை சேர்ந்தவர்கள்? என்பதே தற்போதைய மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.

 

பனையூரை நோக்கி மக்கள் நலக் கூட்டணி? 

தேர்தல் முடிவுகள் தொடர்பாக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கூட்டணி ஆட்சிக்கு வழிகை செய்த தமிழக மக்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். ”ஆதரவு கோரி விஜய் அழைப்பு விடுத்தால் ஆலோசனை செய்து முடிவெடுப்போம்” என இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிட் கட்சிகள் தெரிவித்துள்ளன. விஜய்க்கு ஆதரவளிப்பது தொடர்பாக ராகுல் காந்தி முடிவு செய்வார் என, தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலினின் அட்வைஸ் என்ன?

விசிக தலைவர் திருமாவளனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைவர் வீரபாண்டியன் ஆகியோர், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர். விஜய் ஆட்சி அமைக்காவிட்டால் குடியரசு தலைவர் ஆட்சி அமைய வாய்ப்புள்ளதையும், அது நேரடியாகவே தமிழ்நாட்டில் பாஜக ஆள்வதற்கு வழிவகுக்கும் என்றும், மீண்டும் ஒருவேளை தேர்தல் நடந்தால் விஜய்க்கு அனுதாபத்தால் கூடுதல் தொகுதிகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் திமுக கருதுகிறதாம். இதனை தவிர்க்க விருப்பமிருந்தால் தாராளமாக விஜய் ஆட்சி அமைக்க ஆதரவளியுங்கள் என திமுகவே ஆலோசனையும் வழங்கக்கூடுமாம். இதுபோக காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே தவெக பக்கம் செல்ல விருப்பம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜயின் கூட்டணி கணக்கு என்ன?

தமிழக வெற்றிக் கழகம் தற்போது 108 இடங்களை பெற்றுள்ளது. இதுபோக பெரும்பான்மையை எட்ட 10 இடங்கள் தேவைப்படுகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப காங்கிரஸ் கட்சி வென்றுள்ள 5 இடங்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்கள் என மொத்த 11 இடங்கள் உள்ளன. இதன் மூலம் 119 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கக் கூடும்.

விஜயின் அமைச்சரவையில் யார்?

விஜய் முதலமைச்சராக பதவியேற்கும்போது தவெகவின் பல முன்னணி நிர்வாகிகள் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. அதில் என். ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் அருண் ராஜ் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாம். இதுபோக சத்யபாமா, டாக்டர் பிரபு, மதுரை கல்லணை, நடிகர் ஸ்ரீநாத், தாஹிரா, ராஜ்மோகன், ஈசிஆர் சரவணன் மற்றும் விஜய் சரவணன் ஆகியோருக்கும் அமைச்சரவையில் வாய்ப்புள்ளதாம். கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ். பாபு அல்லது ஜே.சி.டி. பிரபாகர் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் சபாநாயகராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாம்.

Related Post

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

அ.தி.மு.க. கூட்டணியில் சேர திட்டம்? – கட்சி நிர்வாகிகளுடன் சீமான் தீவிர ஆலோசனை

Posted by - July 23, 2025 0
  #Seeman #NaamThamizha Katchi #ADMK #TNAssemblyElection #சீமான் #நாம்தமிழர்கட்சி #அதிமுக #எடப்பாடிபழனிசாமி #தமிழகசட்டசபைதேர்தல் 2010-ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியை வழி நடத்தி வரும்…

அதிமுக ஆட்சியை காப்பாற்றியது மத்திய பாஜக அரசுதான்: பழனிசாமி தகவல்

Posted by - September 16, 2025 0
சென்னை: அதி​முக ஆட்​சியை காப்​பாற்​றியது மத்​திய பாஜக அரசு​தான். அதற்கு நன்​றி​யுடன் இருக்​கிறோம் என்று அண்ணா பிறந்​த​நாள் விழா பொதுக்​கூட்​டத்​தில் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார். அதி​முக சார்​பில் அண்​ணா​வின் 117-வது…
Generated Image January 07 2026 5 03PM 1

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - January 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…

கூட்டணிக் கட்சிகள் போர்க்கொடி; இபிஎஸ்-க்கு நெருக்கடி- அமித்ஷா பக்கா ஸ்கெட்ச்!

Posted by - July 24, 2025 0
கூட்டணிக் கட்சிகளுக்குள் இருந்தே இபிஎஸ்-க்கு தொடர்ந்து அழுத்தம் வருவதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 2026-ல் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிதான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *