Breaking News Trump and US Midterms

அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி – ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?

151 0

2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபருக்கான தேர்தலுக்கு முன்னோட்டமாக விளங்கும் இடைக்காலத்தேர்தல்

அமெரிக்காவின் இடைக்காலத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கடும் பின்னடைவை சந்தித்துள்ள குடியரசுக்கட்சி

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 உறுப்பினர் இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும், 36 மாகாணங்களில் ஆளுநர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையை ஜனநாயகக்கட்சி கைப்பற்றியுள்ளது. இந்த இடைக்காலத்தேர்தலுக்கு முன்பாக குடியரசுக் கட்சிக்கு 53 உறுப்பினர்களும், ஜனநாயகக் கட்சி மற்றும் சுயேட்சை உறுப்பினர்களுக்கு 47 இடங்கள் இருந்தன. தற்போதைய தேர்தல் முடிவுகளின்படி ஜனநாயகக்கட்சி மொத்தமாக 51 இடங்களையும், குடியரசு கட்சி 39 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் பிரதிநிதிகள் அவையிலும் பெரும்பான்மையுடன் இருந்த ட்ரம்பின் குடியரசுக்கட்சிக்கு தற்போதைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் கடும் பின்னடைவு ஏற்பட்டு, ஜனநாயக கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?

நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால் அதிபராக உள்ள ட்ரம்ப் பதவி விலக நேரிடுமா என்றால் இல்லை. இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி வென்றாலும் ட்ரம்ப் அதிபராகவே தொடர்வார். ஏனெனில் அமெரிக்காவை பொறுத்த வரையில் அதிபருக்கான தேர்தல்வேறு, உறுப்பினர்களுக்கான தேர்தல் வேறு. 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபருக்கான தேர்தல்வரை அப்பதவியில் ட்ரம்பே தொடர்வார். ஆனால் அவையில் கொண்டுவரும் தீர்மானங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படக்கூடும்.

இடைக்காலத்தேர்தல் முடிவுகள் அதிபர் தேர்தலில் எதிரொலிக்குமா?

இடைக்காலத்தேர்தலில் ட்ரம்பின் குடியரசுக்கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், இது 2028-ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலின் முன்னோட்டமாகவே கருதப்படுகிறது.இத்தேர்தல் முடிவுகளை கொண்டே இரு கட்சிகளும் அதிபர் தேர்தலுக்கான திட்டமிடலையும், வியூகத்தையும் வகுக்க இயக்கும்.இந்நிலையில் அமெரிக்க சட்டப்படி ஒருவர் இருமுறை மட்டுமே அதிபராக பதவி வகிக்க முடியுமென்பதால் அடுத்த அதிபர் தேர்தலில் ட்ரம்பிற்கு பதிலாக வேறு ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

வீழ்த்தப்பட்ட 800 ஆண்டு பழமையான இனம்! உலகை அதிர வைத்த 21 வயது பெண் எம்பி! இது மாவோரி இனத்தின் வரலாறு

Posted by - ஜனவரி 6, 2024 0
வெலிங்டன்: நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த 21 வயது பெண் முழக்கமிட்ட வீடியோ டிரெண்டாகியுள்ள நிலையில், இந்த மாவோரி இன மக்கள் யார்.அவர்கள் வரலாறு என்ன…

மோடி பார்த்த வேலை? இந்திய விமானங்களை சுட்டு தள்ளிய பாக்., போட்டுக் கொடுத்த ராணுவ அதிகாரி?

Posted by - ஜூன் 30, 2025 0
இந்திய அரசியல் தலைவரின் நிலைப்பாடு காரணமாகவே, ஆப்ரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானால் நமது விமானங்கள் சில சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்திய அரசியல்…
டிரம்ப் புதின் ஜி ஜின்பிங் உச்சிமாநாடு நடைபெற்ற இடம்

டிரம்ப் புதின் ஜி ஜின்பிங் சந்திப்பு: புதிய சகாப்தம்

Posted by - நவம்பர் 19, 2026 0
டிரம்ப் புதின் ஜி ஜின்பிங் ஆகியோர் சீனாவின் ஷென்சென் நகரில் சந்தித்து நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையானது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட்…
பிரேசில் அமேசான் காடுகளில் வாழும் அவா பழங்குடிகள் தொடர்பான காட்சி

அவா பழங்குடிகள் தொடர்பு: அமேசான் காடுகளில் புதிய மாற்றம்

Posted by - நவம்பர் 22, 2026 0
அவா பழங்குடிகள் பிரேசிலின் அமேசான் காடுகளில் பல ஆண்டுகளாக வெளிஉலகத் தொடர்பு இல்லாமல் தனிமையில் வாழ்ந்து வந்தனர். அமகாரியா, ஜகரேவிஜ், இராஹோவா ஆகிய மூவரும் தங்களுக்குச் சொந்தமான…

நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் காண நீங்கள் தயாரா?

Posted by - மார்ச் 27, 2023 0
நியூயார்க் : இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். அப்படி என்ன அதிசயம் நடக்கப்போகிறது என்று கேட்கிறீர்களா?…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன