Gemini Generated Image hna77uhna77uhna7 e1793766948638

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு – 3 நாட்கள் மட்டுமே டைம்!

152 0

218 விற்பனை நிலையங்கள் மூலம் நவம்பர் 5 – 7-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்பு விற்பனை நடைபெறும் என அறிவிப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.100 மதிப்பிலான வெற்றி சிறப்பு காய்கறித்தொகுப்பு திட்டம் நாளை முதல் தொடங்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 10 வகையான காய்கறிகள் அடங்கிய வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு, ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில் வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு செயல்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 218 விற்பனை நிலையங்கள் மூலம் இந்தக் காய்கறித் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சென்னையில் கூடுதலாக 4 நடமாடும் காய்கறிக் கடைகள் மூலம் விற்பனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன காய்கறிகள் இடம்பெறும்?

வெற்றி சிறப்பு காய்கறி திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தொகுப்பில் 10 வகை காய்கறிகள் இடம்பெற உள்ளன. அவை முறையே அரைக்கிலோ அளவிலான பெரிய வெங்காயம் மற்றும் தக்காளி, கால் கிலோ அளவிலான கத்தரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு, 200 கிராம் அளவிலான கேரட் மற்றும் பின்ஸ், 100 கிராம் அளவில் பச்சை மிளகாய், எலுமிச்சை, 50 கிராம் எடையுள்ள இஞ்சி மற்றும் 400 – 450 கிராம் எடையிலான தேங்காய் உள்ளிட்டவை வழங்கப்படுமென கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

நவம்பர் 5 முதல் 7-ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு இந்த சிறப்பு விற்பனை நடைபெற உள்ள நிலையில், அனுமதிக்கப்பட்ட தொகையான ரூ.100-ஐ விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ நுகர்வோரிடம் வசூலிக்கக்கூடாது எனவும் கூட்டுறவு விற்பனை நிலைய பணியாளர்களுக்கு தமிழக அரசு அறிவிறுத்தியுள்ளது.

Related Post

நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: சென்னையில் 3 ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைப்பு

Posted by - செப்டம்பர் 15, 2023 0
சென்னை: நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் முன்எச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் அதற்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி…
%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95

ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக

Posted by - ஜூன் 27, 2026 0
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் குவிந்து வருகிறது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர்…
Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin: சூடு சொரணை இருக்கும்ன்னு நினைச்சேன்.. முதல்வர் விஜய் பற்றி உதயநிதி சர்ச்சை பேச்சு.. குவியும் கண்டனம்!

Posted by - ஆகஸ்ட் 25, 2026 0
திமுக மீது பொய் குற்றச்சாட்டு வேண்டுமானால் வைக்கலாமே தவிர எதையும் நிரூபிக்க முடியாது என அவர்களுக்கு தெரியும் என தவெகவினரை உதயநிதி ஸ்டாலின் சாடியுள்ளார். திமுகவின் ஊழல்…

கைகள், தோள்பட்டை, கால்களுக்கு வலிமை தரும் அர்த்த பூர்வோத்தானாசனம்

Posted by - மார்ச் 10, 2023 0
அர்த்த பூர்வோத்தானாசனம் என்னும் இந்த ஆசனத்தின் வடமொழி பெயரில் ‘அர்த்த’ என்றால் ‘பாதி’, ‘பூர்வ’ என்றால் ‘கிழக்கு’, ‘உத்’ என்றால் ‘தீவிரம்’ (intense), ‘தான்’ என்றால் ‘நீட்டுவது’…

நிறைவடைந்தது ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம்; தமிழக அரசு முக்கிய முடிவு

Posted by - ஜனவரி 5, 2025 0
2019-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சிறப்பு அலுவலர்களை நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாட்டில் 2019…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன