Breaking News Conference Graphic

CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

92 0

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான சிறப்புத் திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் காலியாக இருந்த தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் வீழ்த்தி தவெக வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கான புதிய திட்டங்களை தவெக அரசு அறிவித்துள்ளது.

தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்:

முதலமைச்சர் விஜய் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

1. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 455 ஊரக குடியிருப்புகளில் 1,223 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள தாராபுரம், காங்கேயம், குண்டடம், பொங்கலூர், வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் மூலனூரின் 7 ஊராட்சிகள், பல்லடத்தின் 17 ஊராட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 1,232 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்ட புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் 1439 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

2. தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடற்றவர்களுக்கு 2,700 இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். தாராபுரம் வட்டம், சின்னப்புத்தூர் கிராமம், மஜரா குருவப்ப நாயக்கன் பாளையத்தில் 20 ஆண்டுகளாக வீடுகட்டி குடியிருந்து வரும் 87 குடும்பங்களுக்குப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

 

3.திருப்பூர் மாவட்டத்தில் பாசன கால்வாய்களில் உள்ள மண்திட்டுக்களை அகற்றி தூர்வாரும் 159 பணிகள் சுமார 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.  குறிப்பாக, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் பாசன வாய்க்கால்களில் உள்ள மண்திட்டுகள், புதர்கள் மற்றும் முட்செடிகளை அகற்றி சுமார் 271 கி.மீட்டர் நீளத்தி்றகு வாய்க்கால்கள் மற்றும் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

4. தாராபுரம் மூலனூர், குண்டடம் வட்டாரங்களில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்து சுமார் 13 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

5. தாராபுரம் வட்டம் மூலனூரில் ஒரு புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அமைக்கப்படும்.

6. தாராபுரம் நகராட்சியில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் குடிநீர் மேம்பாட்டுப் பணிகளும், சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகள் அமைக்கும் பணிகளும், சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகளும், மேலும் மழைநீர் வடிகால் மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

Generated Image January 07 2026 5 03PM 1

ஆசிரியர்களின் CPS தொகை ரூ.1 கோடி அரசு வசம்! எதிர்க்கும் சங்கங்கள்- வெடிக்கும் போராட்டம்?

Posted by - ஜனவரி 7, 2026 0
அரசுக்கு அழுத்தம் தருகின்ற வகையில் வலுவான போராட்டத்தினை உடனடியாக அறிவித்து இந்த தொகையினை துரிதமாக பெற கடுமையான போராட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு அரசு…
vijay tour

TVK Vijay: வேளாங்கண்ணி டூர் கேன்சல்.. விஜய் சம்பவம்..

Posted by - மே 2, 2026 0
விஜயை காண நேற்றிரவு முதல் பொதுமக்கள் வேளாங்கண்ணி ஆலயத்துக்கு படையெடுத்தனர். புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் அதிகாலை திருப்பலி நடக்கும்போது விஜய் வராமல் இருந்ததால் குழப்பமடைந்தனர். தமிழக…

போச்சு.! அடுத்த 10 வருஷத்துக்கு திமுக ஆட்சிக்கு வர முடியாது; செல்லூர் ராஜு சொன்ன மதுரை செண்ட்டிமென்ட்

Posted by - ஜூன் 2, 2025 0
திமுக அடுத்த 10 வருடங்களுக்கு ஆட்சிக்கு வர முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். ஒரு செண்ட்டிமென்டை வைத்து அவர் இப்படி கூறியுள்ளார்.…
Gemini Generated Image atwh1eatwh1eatwh

புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்: காவல்துறை கெடுபிடி! தவெக வியூகம் மாற்றம்? பரபரப்பு தகவல்!

Posted by - ஏப்ரல் 1, 2026 0
புதுச்சேரியில் விஜய்க்கு ‘செக்’ வைத்த காவல்துறை? 19 இடங்களுக்கு அனுமதி மறுப்பு! புதுச்சேரி: தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலிலும் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம்…

மாணவர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு விஜய் மாநாட்டுக்குப் போனார்களா? – திமுகவுக்கு புளியை கரைக்கும் புள்ளிவிவரம்!

Posted by - அக்டோபர் 11, 2025 0
தமிழகத்தின் கல்வி வளர்ச்சி, அதற்காக அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் உள்ளிட்டவை குறித்து விளக்கவும், கல்வியில் சிறந்த சாதனையாளர்களை அழைத்து கவுரவிக்கவும் ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்ற…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன