dmk cong

திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்

76 0

DMK Cong: மதச்சார்பற்ற கட்சி என முகமூடியை அணிந்துகொண்டு திமுக நாடகமாடுவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் (Manickam Tagore) குற்றம்சாட்டியுள்ளார்.

DMK Cong: பாஜக உடன் கூட்டணி வைத்து பின் வாசல் வழியாக திமுக ஆட்சி அமைக்க முயன்றதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக – காங்கிரஸ் மோதல்:

தேர்தலுக்குப் பிறகு திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெக உடன் சேர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ளது. இதனால் இந்த இரண்டு முன்னாள் கூட்டணி கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தை போர் வெடித்து உள்ளது. இந்நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் நடைபெற்ற கட்சியின் இளைஞரணி கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் காங்கிரஸ் ஒழிக என முழக்கம் எழுப்பினர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை இனி கூட்டணியில் சேர்க்கவே கூடாது, அது முதுகில் குத்தும் கட்சி, பாஜக இத்தனை நாட்கள் வெற்றி பெற காரணமே காங்கிரஸ் தான் எனவும் கடுமையான வார்த்தைகளை கொண்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்வினையாற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதச்சார்பற்ற கட்சி என முகமூடியை அணிந்துகொண்டு திமுக நாடகமாடுவதாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் (Manickam Tagore) குற்றம்சாட்டியுள்ளார்.

 

”நாடகமாடும் திமுக”

மாணிக்கம் தாக்கூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ரிசல்ட் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே திமுக-அதிமுக ரகசிய பேச்சுவார்த்தையை  ஆரம்பிச்சுட்டாங்க. அதற்கான முன்னேற்பாடுகளை ஒரு மூத்த பாஜக தலைவர் முன்னின்று செய்தார். இப்போ அது மெதுவாக வெளியே வருது. காங்கிரஸ் எப்பவும் பாஜக உடன் சமரசம் செய்து கொள்ளாது. பாஜக உடன் திரைமறைவு ஒப்பந்தத்தை வைத்துக்கொண்டு வெளியே மதச்சார்பற்றவர்கள் எனும் முகமூடியை அணிந்துகொள்பவர்களை நம்ப முடியாது. அதனால்தான் 5ம் தேதியே நாங்க தெளிவாக சொல்லிட்டோம். பாஜக உடன் பின்வாசல் அரசியல் செய்பவர்களோடு பேசவே வொர்த் இல்லைன்னு. நாங்க எடுத்த முடிவு எளிமையானது. தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற அரசாங்கத்திகு மட்டும் தான் ஆதரவு என.

நல்ல அழுங்க.. திமுக மீது சாடல்

இப்போது திமுக இளைஞரனி காங்கிரசையும் ராகுல் காந்தியையும் குறிவைத்து தீர்மானங்களை நிறைவேற்றுகிறது. ஏனென்றால் அவர்களுடைய திட்டம் வீணாகிவிட்டது. திட்டம் என்னவென்றால் பாஜக ஆசைப்பட்ட மாதிரி விஜய் முதலமைச்சர் ஆவதை நிறுத்த வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் தான் இப்போது இவ்வளவு கோஷம், தீர்மானங்கள், நாடகம் எல்லாம். அழுங்கள், அழுங்கள், அழுங்கள்.  தமிழ்நாடு மக்கள் உங்களுடைய உண்மையான நிறத்தை எல்லாம் பாத்துட்டாங்க.IUML தலைவர் கூட உங்க ரகசிய திட்டத்தை வெளியே கொண்டு வந்துவிட்டார். விசிக தலைவர் கூட திமுகவின் ரகசிய திட்டத்தை வெட்டவெளிச்சமாக்கியுள்ளார். CPM தலைவர் கூட உங்க திட்டத்தை பற்றி வெளிப்படையாக சொல்லிட்டார். நீங்கள் எவ்வளவு தான்காங்கிரசை தாக்கினாலும் உண்மை மாறாது. மக்கள் எல்லாத்தையும் கவனிச்சுட்டு தான் இருக்காங்க” என திமுகவை மாணிக்கம் தாக்கூர் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

Related Post

dmk e1780464006645

துரதிருஷ்டவசமா..? – துரை வைகோ கருத்தால் துடி துடிக்கும் திமுக

Posted by - June 3, 2026 0
“சட்டப்பேரவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் துரதிருஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டனர். அதனால் தவெக அரசுக்கு ஆதரவு கொடுக்க முடியவில்லை” – மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவின்…
Generated Image November 27 2025 10 12AM

”விஜய் கட்டுவது குட்டிச்சுவர், யாராலும் ஆட்சி அமைக்க முடியாது” அட்டாக் மோடில் சீமான்

Posted by - November 27, 2025 0
Vijay  vs Seeman: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக சாடி பேசியுள்ளார். ஒரு வழக்கு போட்டதும்…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - May 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…
Generated Image January 12 2026 5 19PM

கொத்து கொத்தாக வாக்குறுதி அறிவித்த இபிஎஸ்

Posted by - February 4, 2026 0
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பாக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி கடன் தள்ளுபடி, முதியோர் ஓய்வூதியம், மானிய விலையில் சிலிண்டர் என பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *