சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் கயல்விழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது

கயல்விழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

16 0

கயல்விழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடையாறு காந்தி நகர் பகுதியில் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகளுக்கு சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கி இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தில் உள்ள லிஃப்ட் பழுது தொடர்பாக வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங், கயல்விழியின் உதவியாளரிடம் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் பழுது சரிசெய்யப்படாததால் வங்கி மேலாளர் நேரடியாக கயல்விழியைத் தொடர்பு கொண்டு புகார் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் வங்கி அலுவலகத்திற்கு வந்த கயல்விழி, மேலாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

வங்கி மேலாளர் தாக்கப்பட்ட விவகாரம்

வாக்குவாதம் முற்றிய நிலையில், வங்கி மேலாளர் ஹர்ஷீன்சிங்கை கயல்விழி கன்னத்தில் அறைந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட வங்கி மேலாளர் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கயல்விழி மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது.

சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை

சாஸ்திரி நகர் காவல்துறையினர் இந்த வழக்ப் தொடர்பான விசாரணையை முடித்து சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கயல்விழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை வருகிற டிசம்பர் 22-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளர் தாக்கப்பட்ட இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் தமிழ்நாடு செய்திகளை Pixel Tamil தளத்தில் படியுங்கள்.

MURUGAN

முருகன் – PixelTamil.com செய்தி ஆசிரியர். தமிழ்நாடு, இந்தியா, உலகம், அரசியல் மற்றும் சினிமா தொடர்பான செய்திகளைத் துல்லியமாகவும் விரைவாகவும் வழங்குகிறார்.

Related Post

தூதுவளை.. அத்துடன் வேப்பிலை.. பற்களை பாதுகாக்கும் ஆச்சரிய இலைகள்.. ஈறுகளை பாதுகாக்கும் துளசியிலை

Posted by - டிசம்பர் 8, 2023 0
சென்னை: பற்களை பாதுகாப்பதில் உணவுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. அந்தவகையில், சிலவகை இலைகளின் முக்கியத்துவத்தை இங்கு பார்க்கலாம். பொதுவாக, பற்களின் நிறம், ஈறுகளின் நிறத்தை வைத்தே, ஒருவரின்…
ss

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை; 9 காவலர்களும் குற்றவாளிகள்; வழக்கில் நீதிபதி அதிரடி தீர்ப்பு

Posted by - மார்ச் 23, 2026 0
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி, 9 காவலர்களும் குற்றவாளிகள் என அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார். சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை மகனான…

காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!!

Posted by - ஏப்ரல் 26, 2024 0
காங்கிரஸில் இணைகிறார் நடிகர் மன்சூர் அலிகான்..!!! பரபரப்பான அரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து நடிகர் மன்சூர் அலிகான் கடிதம் கொடுத்துள்ளார். இந்திய ஜனநாயக…
Tamil Rain Alert Relentless Downpour

TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை

Posted by - அக்டோபர் 23, 2026 0
Tamil Nadu Weather Update (23-10-2026): தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. Tamil Nadu Weather Update…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன