Tamil Rain Alert Relentless Downpour

TN Weather News: விடாது கொட்டும் மழை – 29 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட் – சென்னை? தமிழக வானிலை அறிக்கை

104 0

Tamil Nadu Weather Update (23-10-2026): தமிழ்நாட்டில் இன்று சென்னை உள்ளிட்ட 29 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Tamil Nadu Weather Update (23-10-2026): தமிழ்நாட்டில் நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், “ பல மணிநேரங்களுக்குப் பிறகு, தெற்குச் சென்னையிலிருந்து மேகங்கள் மெல்ல சென்னை நகருக்குள் நகர்ந்து வருகின்றன. சென்னையின் கடலோரப் பகுதிகளில் மழை தொடங்கத் தொடங்கி, நகரின் பெரும்பாலான பகுதிகளுக்கும் பரவும். இன்று சென்னைக்கு மிக முக்கியமான நாள் அல்ல; 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகள் சென்னைக்கு மிகவும் சாதகமான நாட்களாக இருக்கும். தமிழகத்தின் உட்புறப் பகுதிகள் – டெல்டா மற்றும் தெற்குத் தமிழகப் பகுதிகள், கடலூர் விருதுநகர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தென்காசி, திருப்பூர், அரியலூர், டெல்டா பகுதிகள், திருவாரூர், கடலூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் பரவலான மழை பெய்துள்ளது.” என விவரித்துள்ளார்.

இன்று மிக கன மழைக்கான எச்சரிக்கை:

இதனிடையே, வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. அதனால் இன்று கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கன மழைக்கான எச்சரிக்கை:

மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர்’ மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை பகுதிகளுக்கான இன்றைய வானிலை

சென்னையை பொறுத்தவரை இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான / கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

23-10-2026 முதல் 26-10-2026 வரை: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

23-10-2026: அந்தமான் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு – தென்மேற்கு- மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

23-10-2026 முதல் 26-10-2026 வரை: கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்” என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Related Post

Kanyakumari YouTuber jewellery thef

REELS மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்

Posted by - செப்டம்பர் 29, 2026 0
Kanyakumari YouTuber jewellery thef : தங்களிடம் பணம், நகைகள் அதிகமாக இருப்பதாக பந்தாவாக வீடியோ வெளியிட்ட யூடியூபர் வீட்டில் பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், கொள்ளையர்களை…

மருத்துவ கல்லூரி மாணவரிடம் ரூ.7¾ லட்சம் ஆன்லைன் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

Posted by - ஜூலை 10, 2023 0
புதுச்சேரி: புதுவை லாஸ்பேட்டையை சேர்ந்தவர் சசிதரன் (வயது 23). இவர் புதுவை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு…
health 1

வெறும் வயிற்றில் தக்காளி சாறு அருந்துவதால் உங்க உடலில் நடக்கும் அற்புதங்கள் என்னென்ன தெரியுமா?

Posted by - டிசம்பர் 4, 2023 0
ஒவ்வொரு நாளுமே நமக்கு முக்கியமான நாள்தான். அதனால், தினமும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க நீங்கள் சாப்பிடும் உணவோடு ஆரோக்கியமான ஒரு மாற்றத்தை வழக்கமாக வேண்டும். ஏனெனில், நீங்கள்…

இனியும் பெண் கொடுக்க தயங்குவீர்களா…! ஒரே நாளில் ரூ.4 லட்சத்திற்கு தக்காளி விற்பனை செய்த விவசாயி

Posted by - ஆகஸ்ட் 2, 2023 0
திருப்பூர்: தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை உயர்ந்து வருவதால், நடுத்தர…
tamil news

CM Vijay: உதயநிதிக்கு நோ, ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு புன்னகைத்தபடி வணக்கம் சொன்ன விஜய் – வீடியோ வைரல்

Posted by - மே 11, 2026 0
CM Vijay EPS: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதியை தவிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு முதலமைச்சர் விஜய் வணக்கம் சொன்ன வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன