%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D %E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D

கும்பகோணத்தை தனி மாவட்டமாக முதல்வர் விஜய் விரைவில் அறிவிப்பார்: அமைச்சர் வினோத் உறுதி

101 0

கும்பகோணம்: கும்​பகோணத்தை தனி மாவட்​ட​மாக தமிழக முதல்​வர் விஜய் விரை​வில் அறி​விப்​பார் என மாநில வேளாண்​மைத் துறை அமைச்​சர் வினோத் தெரி​வித்​தார்.

கும்​பகோணத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: 2028 மாசி மகாமக விழா தொடர்​பாக, அறநிலை​யத் துறை அமைச்​சருடன் ஆலோ​சனை நடத்​தப்​பட்டு வரு​கிறது. அந்த விழாவுக்கு 50 லட்​சம் பக்​தர்​கள் வரை வரு​வார்​கள் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனவே, மகாமக விழாவுக்​கு வரும் பக்தர்களின் வசதிக்காக மேற்​கொள்ள வேண்​டிய பணி​கள், ஏற்​பாடு​கள், நிறைவேற்​றப்பட வேண்​டிய அடிப்படை வசதி​கள் குறித்து அதிகாரிகள் தரப்பில் பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு வரு​கிறது.

மேலும் கும்​பகோணத்தை தனி மாவட்​ட​மாக அறி​விப்​ப​தற்​கான முயற்​சியை மேற்​கொண்டுவரு​கிறோம். கும்​பகோணத்தை தனி மாவட்​ட​மாக முதல்​வர் விஜய் விரை​வில் அறி​விக்க உள்ளார். கும்​பகோணத்​தில் சுற்​றுச்​சாலை அமைக்​கும் பணி​யில் 3-ம் கட்​டப் பணி இன்​னும் தொடங்​கப்​ப​டா​மல் உள்​ளது குறித்து எனது கவனத்​துக்கு தற்​போது வந்​துள்​ளது.

அப்​பணியை விரை​வாக மேற்​கொள்ள நடவடிக்கை எடுக்​கப்​படும். முந்​தைய ஆட்​சிக்​ காலத்​தில் தொடங்​கப்​பட்​டு, இது​வரை முடி​யாத திட்​டங்​கள் குறித்து ஆய்வு செய்ய அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார்​.

Related Post

முடிந்தது 1st Sitting பேச்சுவார்த்தை மீண்டும் இணையும் இலை!…

Posted by - November 9, 2023 0
தமிழகத்தில் பிரபல ஊடகவியலாளரின் YOUTUBE ஊடகம் ஒன்று  ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணியினரின் முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் அனைத்துகட்ட பேச்சுவார்த்தைகளும் முடிந்து இரண்டு…

முடிஞ்சிப்போன கதை! இப்போ ஏன்? – உதயநிதி அரசியல் குறித்த கேள்விக்கு மனைவி கிருத்திகா கொடுத்த பதில்

Posted by - January 8, 2025 0
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலிக்க நேரமில்லை. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு…

தாய்கோ வங்கியில் ரூ. 94 லட்சம் மோசடி- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பேர் கைது

Posted by - August 5, 2023 0
சேலம்: சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94…

ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது – எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்

Posted by - April 16, 2025 0
பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா…

யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி

Posted by - February 21, 2025 0
ஆனாலும் பாஜக தலைவர்களுக்கும் மற்ற கட்சி தலைவர்களுக்கும் வார்த்தை போர் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய நிதியுதவியை கேட்கிறோம் எனவும் மொழியை வைத்து என்ன அரசியல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *