PT Sir – திரைவிமர்சனம்

253 0

கதைக்களம்

சமுதாயத்தில் நல்ல அந்தஸ்துடன் கல்லூரி மற்றும் பள்ளியை நடத்தி வருகிறார் தியாகராஜன். இந்த பள்ளியில் PT Sir வாத்தியாராக பணிபுரிபவர் தான் கதையின் நாயகன் ஹிப் ஹாப் ஆதி.

எந்த ஒரு பிரச்சனை என்றால் அதில் பாய்ந்து நீதியை தட்டி கேட்பவர் அல்ல ஆதி, எங்கு பிரச்னை ஏற்பட்டாலும் அதிலிருந்து விலகியே இருக்க வேண்டும் என நினைப்பவர்.

இந்த சமயத்தில் ஆதி தனது தங்கையாக நினைக்கும் அனிகாவிற்கு கல்லூரி நிறுவனத்தில் இருந்து பிரச்சனை ஒன்று ஏற்படுகிறது. இதனால் அவர் தற்கொலை செய்துகொள். அதன்பின் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல்

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு திரைப்படத்தில் பேசியது போலவே இப்படத்திலும் சமுதாய அக்கறையோடு இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் தனது இயக்கத்தின் மூலம் பேசியுள்ளார்.

சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை படத்தில் காட்டிய விதம் அருமை. ஆனால், அதில் சுவாரஸ்யம் குறைவு.

சிறு குழந்தை முதல் 40 வயதாகும் பெண் வரை சமூகத்தில் சந்திக்கும் கசப்பான அனுபவங்களை வலியுடன் திரை வழியாக நமக்கு கடத்திய விதம் சூப்பர். அதற்கு இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலனுக்கு பாராட்டுக்கள்.

திரைக்கதையில் சில தொய்வு இருந்தாலும், இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் காட்சி அசத்தல் இருந்தது. கதாநாயகன் ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனிகாவின் நடிப்பு படத்திற்கு பலம். ஆனாலும் கூட ஹிப் ஹாப் ஆதி இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.

கதாநாயகி காஷ்மீராவிற்கு இன்னும் ஸ்கோப் கொடுத்திருக்கலாம். வில்லனாக வரும் தியாகராஜன் மிரட்டுகிறார். படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இளவரசு மற்றும் தேவதர்ஷினியின் நடிப்பு தான். எந்த வகையில் அவர் குறை வைக்கவில்லை.

பாடல்கள் மனதை தொட வில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை சேர்க்கிறது. குறிப்பாக அச்சமில்லை அச்சமில்லை என்ற இசை வரும் இடம் வெறித்தனம். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஓகே.

பிளஸ் பாயிண்ட் 

  • பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை காட்டிய விதம்
  • ஹிப் ஹாப் ஆதி மற்றும் அனிகா நடிப்பு
  • இளவரசு மற்றும் தேவதர்ஷினி நடிப்பு
  • பின்னணி இசை
  • இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்

மைனஸ் பாயிண்ட்

  • சில இடங்களில் ஏற்பட்ட தொய்வு
  • சுவாரஸ்யம் குறைவு

மொத்தத்தில் சமுதாய அக்கறையோடு எடுக்கப்பட்ட PT Sir திரைப்படத்தை கண்டிப்பாக அனைவரும் பார்க்கலாம்.

                • RATINGS: 5/10

Related Post

2025ஐ குறிவைக்கும் 7 படங்கள்.. 40 வருட சினிமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தளபதி

Posted by - October 8, 2024 0
2025 Release Kollywood Movies : இந்த வருடம் இந்தியன் 2, கோட் என பெரிய நடிகர்களின் படம் வெளியானாலும் விமர்சனம் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை. மேலும்…

இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

Posted by - June 12, 2023 0
இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல்…

‘பகாசூரன்’ விமர்சனம்: ‘யாரோடும் ஒப்பிடாதீங்க…’ இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

Posted by - February 18, 2023 0
ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி…

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மற்றும் வீரன் படங்கள் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 7, 2023 0
காதர் பாட்சா வசூல் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த…

ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

Posted by - July 8, 2023 0
STR 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *