Joyful Ration Shop Celebration

Ration Shop: சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்! தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

150 0

Ration Shop Employees: ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கையை அடுத்து தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என தமிழக அரசு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நவம்பர் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பத்தினருடன் செல்ல திட்டமிட்டுள்ளனர். பொதுவாக, தமிழகத்தில் தீபாவளிக்கு மட்டுமே அரசு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.

தீபாவளி பண்டிகை

இந்நிலையில் தீபாவளி கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக தீபாவளி மறுநாள் அதாவது நவம்பர் 9ம் தேதி திங்கள் கிழமை அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனையடுத்து தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதேபோல் ரேஷன் கடை பணியாளர்களும் நவம்பர் 9ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள்

இதுதொடர்பாக தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆகியவற்றுக்கான தொடர் விடுமுறை காரணமாக, பொது விநியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள், ரேஷன் அட்டைதாரர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக அக்டோபர் 18ம் தேதியன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

தீபாவளி மறுநாள் விடுமுறை

அதை ஈடுசெய்யும் விதமாக நவம்பர் 21ம் தேதி அன்று விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகை தினமான 8-ம் தேதிக்கு (ஞாயிற்றுக்கிழமை) அடுத்த நாளான 9-ம் தேதியை விடுமுறை நாளாக, அதாவது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்ட 21.11.2026 தேதிக்கு மாற்றாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. அந்த கோரிக்கையை ஏற்று, வரும் 9-ம் தேதியை விடுமுறை நாளாகவும், 21-ம் தேதியை பணி நாளாகவும் அறிவித்து உத்தரவிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

tamilnaducorrubtion

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்டால் வாட்ஸ்-அப்பில் புகார் கொடுக்கலாம்: அரசு அறிவிப்பு

Posted by - ஜூலை 16, 2026 0
  சென்னை: அரசு அலு​வல​கங்​களில் யாராவது லஞ்​சம் கேட்​டால் பொது​மக்​கள் உடனடி​யாக புகார் அளிக்​கும் வித​மாக புதிய வாட்​ஸ்​-அப் எண்ணை தமிழக அரசு வெளி​யிட்​டுள்​ளது. தமிழகத்​தில் முதல்​வர் விஜய்…

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ

Posted by - டிசம்பர் 7, 2023 0
மிக்ஜாம் புயல் மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது சென்றுவிட்டது. புயல் முடிந்து 3 நாட்கள் ஆகியும் இன்னும் மக்கள் அந்த தாக்கத்தில் இருந்து இயல்பு நிலைக்கு…
Gemini Generated Image bj7m1ebj7m1ebj7m

நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

Posted by - மார்ச் 28, 2026 0
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம்…

சிக்கனில் இந்த பாகத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க.. இந்த பிரச்சனை இருக்கவங்க தொடவே கூடாது.!

Posted by - டிசம்பர் 18, 2024 0
சிக்கனை சிலர் மாதத்திற்கு நான்கு முதல் ஐந்து முறை சாப்பிடுகிறார்கள், மற்றவர்கள் வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை சாப்பிடுகிறார்கள். சிலருக்கு சிக்கன் இல்லாமல் ஒரு…

பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு – ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?

Posted by - ஏப்ரல் 25, 2025 0
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன