Gemini Generated Image bj7m1ebj7m1ebj7m

நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்… அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்

143 0

கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கல் கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் 108 திவ்யதேசங்களில் ஒன்றானதும் திருமங்கை ஆழ்வாரால் 100 பாசுரங்கள் பாடப்பட்டு மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான கல்கருட தலமாக போற்றப்படும் வஞ்சுள வள்ளி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கியது. விழா நாட்களில் தினம் பெருமாள் தாயார் வீதி உலா நடைபெறுகிறது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே அமைந்துள்ள நாச்சியார்கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அமைந்துள்ளது கல்கருடன். ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி திருவிழாவின் ஒரு முக்கிய அம்சம்தான் கல்கருடன் வாகனம். மற்ற கோயில்களில் நடைபெறுகின்ற வாகன சேவைகள் போல் இது இருக்காது. உலக பிரசித்தி பெற்றதும், ஆராய்ச்சியாளர்களால் கூட பல காலமாக தீர்வு கண்டறிய முடியாத மர்மத்தை கொண்டுள்ளதுதான் இந்த கல்கருட சேவை திருவிழா. அப்படி என்ன மர்மம் என்று கேட்கிறீர்களா.

108 வைணவத் திருத்தலங்களில் 20வது தலமாக நாச்சியார்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான பங்குனியில் நடைபெறும் திருவிழா வெகு பிரசித்தம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கூடுவர்.

மேதாவி மகரிஷியின் தவத்தை நிறைவேற்ற அவருக்கு மகளாக அவதரித்தார் மகா லட்சுமி தாயார். அவரை மானிட உருவில் வந்து ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் புரிந்துகொண்ட தலம்தான் நாச்சியார்கோவில்.

இக்கோயிலில் வஞ்சுளவல்லி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கிறார். பல நூற்றாண்டு கால மர்மம் இங்குதான் உள்ளது. இக்கோயிலின் தனிச்சிறப்பு என்றால் இங்குள்ள ஒரே கல்லால் ஆன மிகப்பெரிய கல் கருடன் சிலைதான். மார்கழி, பங்குனி என இரண்டு மாதங்களில் மட்டுமே இந்த கல்கருடன் வெளியில் வருவார். இக்கல்கருட பகவான் சன்னிதியிலிருந்து வெளியில் வரும்போது வெறும் 4 பேர் மட்டுமே அவரைச் சுமந்து வருவார்கள்.

அதற்கு பின்னர்தான் இருக்கிறது மர்மமே. கோயில் வாசல் வரை அவரை தூக்கிச் செல்ல 8, 16 என்ற எண்ணிக்கையில் நபர்கள் 128 வரை அதிகரிக்கும். இப்படி 64, 128 என்று அதிகரித்துக் கொண்டே செல்லும் எண்ணிக்கை சேவை சுற்று முடிந்து கல்கருடன் சன்னிதியை நெருங்கும் வரை சுமந்து வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து கொண்டே வந்து கடைசியாக சன்னிதியில் இறக்கி வைக்கப்படும்போது 4 பேர் மட்டுமே சுமந்து வருவார்கள்.

எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் இந்த எடை கூடும் மர்மத்தை ஆராய்ந்து பார்த்தும் இன்று வரை விடை காண முடியாதது இக்கல்கருடனின் சிறப்பு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சரி கல்கருடன் எடை எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள். கல் கருடன் மொத்தம் நான்கு டன் எடையுடன் இருக்கும். 4 டன் எடையுள்ள கருடரை வருடாவருடம் தூக்கி சிறப்பிப்பது இந்த விழா ஆகும். கல் கருடனின் ரகசியம் மட்டும் இன்னும் யாருமே அறிய முடியாத மர்மமாகவே உள்ளது.

அந்த வகையில் நேற்று மாலை சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலவராக வீற்றிருக்கும் கல் கருடரை சன்னதியில் இருந்து வெளியே எடுத்து வரும் போது நான்கு பேர் மட்டுமே தூக்கினார்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கருடரின் எடை கூட துவங்கும். கருடரின் எடை அதிகரிக்க அதிகரிக்க அவரை சுமந்து செல்பவர்களின் எண்ணிக்கையில் 8, 16, 32, 64 என படிப்படியாக அதிகரித்து, இறுதியாக 128 பேர் இந்த கல் கருடரை சுமந்து வந்தனர்.

இதில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். கல் கருட சேவையை தரிசனம் செய்வதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தில் திரண்டு இருந்தனர். பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது நாச்சியார்கோவில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Post

ChatGPT Image May 10 2026 07 13 53 PM

AIADMK: உடைந்தது அதிமுக.! 30 MLA-க்களுடன் பேரவை சென்ற சிவி சண்முகம்; தலைவராகும் எஸ்பி வேலுமணி.!

Posted by - May 11, 2026 0
AIADMK Legislative Party Leader: அதிமுக உடைந்ததாக தகவல் வெளியாகி இபிஎஸ் அதை மறுத்த நிலையில், 30 எம்எல்ஏ-க்களுடன் பேரவைக்கு சென்று எஸ்பி வேலுமணியை சட்டமன்ற குழு…

தி.மு.க.வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்டு காரணம் சொன்ன சத்யராஜ் மகள்!

Posted by - January 19, 2025 0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்த நடிகர் சத்யராஜ் மகள் ஏன் தி.மு.க.வில் இணைந்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் சத்யராஜ். தமிழ்…

”நான் அன்னைக்கே செத்துட்டன், அம்மாவையே பாட்டிலால அடிச்சாரு அன்புமணி” ராமதாஸ் வேதனை

Posted by - May 29, 2025 0
பெற்ற தாயையே பாட்டிலால் அடித்தவர் தான் அன்புமணி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அன்புமணி கூசாமல் பொய் பேசுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். ராமதாஸ்…

தக்காளி விலையுடன் போட்டி போடும் சின்ன வெங்காயம்- கோவையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

Posted by - July 10, 2023 0
கோவை: கோவையில் உக்கடம், காந்திபுரம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட 5 பகுதிகளில் ஒட்டுமொத்த காய்கறி சந்தைகள் உள்ளன. இங்கு வெளியூர், வெளிமாவட்டங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட…

“சென்னை மாஸ்டர் பிளான் 3”.. சிட்டியே மாற போகுது! இனி நீர் நிலைகள் அருகே கட்டுமானம் கட்ட கட்டுப்பாடு?

Posted by - December 12, 2023 0
சென்னை: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சென்னை பெருநகரப் பகுதிக்கான (சிஎம்ஏ) மூன்றாவது மாஸ்டர் பிளானுக்காக (டிஎம்பி) பணிகளை தொடங்கி உள்ளது. இதில் வெள்ளம், புயலில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *