tvk viajy 2

விஜய் தொகுதிகளில் எகிறும் வாக்குப்பதிவு; பெரம்பூர் முதல் திருச்சி வரை அனல் பறக்கும் நிலவரம்!

79 0

 நட்சத்திர தொகுதிகளான பெரம்பூர், கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி கிழக்கில் 11 மணி நிலவரப்படி எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவானது விவரம் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நட்சத்திர தொகுதிகளில் காலை 11 மணி நிலவரப்படி எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவானது என்ற விவரம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.  தமிழக வாக்காளர் பட்டியலில் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில், 2,80,30,658 ஆண் வாக்காளர்களும், 2,93,04,905 பெண் வாக்காளர்களும், 7.728 மூன்றாம் பாலின வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். அரசியல் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜய், சீமான், அண்ணாமலை, டிடிவி தினகரன், கனிமொழி மற்றும் பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ,சிவகார்த்திகேயன், கார்த்தி உள்ளிட்டோர் வாக்களித்தனர்.

காலை 11 மணி நிலவரப்படி 37.56 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இதில், திருப்பூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 42.45 சதவீதமும், கொங்கு மண்டலத்தில் 4 மாவட்டங்களில் 40 சதவீதத்தை கடந்துள்ளது. இதில், நட்சத்திர தொகுதிகளான பெரம்பூர், கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி கிழக்கில் எவ்வளவு சதவீத வாக்குகள் பதிவானது விவரம் வெளியாகியுள்ளது.

11 மணி நிலவரம் நட்சத்திர தொகுதி

பெரம்பூர் தொகுதி – 35.26%

கொளத்தூர் தொகுதி – 37.06%

சேப்பாக்கம் – 34.44%

திருச்சி கிழக்கு – 37.24%

Related Post

a

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் ஸ்டாலின் – பகுதிநேர ஆசிரியர்கள் ஆவேசம்..

Posted by - March 15, 2026 0
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆசிரியர்களை ஏமாற்றிய முதல்வர் ஸ்டாலின் என்ற கெட்டப்பெயர் ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது என மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார். “தமிழகத்தில் திமுக ஆட்சி…
tvk

பாஜகவின் ஆசைக்கு ஆப்பு வைத்த தவெக.!

Posted by - March 16, 2026 0
TVK Alliance : பாஜக, அஇஅதிமுக, சசிகலா, ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என…

ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்!

Posted by - July 25, 2025 0
Anbumani Walking Rally: “அன்புமணி நடைபயணத்திற்கு எதிராக ராமதாஸ் மிரட்டுவதாக அன்புமணி ஆதவாளர்கள் புகார்” பாமகவில் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகிய இருவருக்கும் மோதல்…
Gemini Generated Image brdq6zbrdq6zbrdq

பாஜகவில் களம் இறங்கும் 27 வேட்பாளர்கள் யார்.? அண்ணாமலைக்கு இடம் இருக்கா.? உத்தேச பட்டியல் இதோ…

Posted by - March 26, 2026 0
அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தொகுதிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்த அதிமுக தமிழக சட்டமன்ற…
tvk

சென்னையால் வந்த வினை..! வெற்றிக்காக போராடும் ஆனந்த்?

Posted by - March 17, 2026 0
தமிழக வெற்றிக் கழகத்தில் என்.ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா இடையே வெடித்துள்ள அதிகார மோதல், விஜய்க்கு தலைவலியாக மாறியுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. TVK Vijay TN…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *