dasda e1784789290507

ஒட்டுமொத்த அமைச்சரவையும் தியேட்டரில், வெறிச்சோடிய அலுவலகம்

143 0

TN CM VIJAY Jananayagan : ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க அமைச்சர்கள் திரையரங்கில் குவிந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யும் தலைமைச்செயலகம் வராத காரணத்தால் அனைத்து அலுவலகமும் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் தவெக ஆட்சி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரலாற்று திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், நடிகராக இருந்து 2024 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், அடுத்த இரண்டு வருடங்களில் முதலமைச்சராக பதவியேற்று நாட்டையே திரும்பி பார்க்கவைத்துள்ளார்.  அதிலும் தான் நடித்த ஜனநாயகன் திரைப்படம் தான் கடைசி திரைப்படம் என விஜய் அறிவித்த நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முனபாக ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் ஜனநாயகன் திரைப்படம் வெளியாகவில்லை. இதனையடுத்து தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

வெளியானது ஜனநாயகன்

இந்த நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு ஜனநாயகன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்கு ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 90% பேர் திரையரங்கில் முதல் காட்சியை பார்த்து வருகின்றனர். இதே போல தவெக எம்எல்ஏக்களும் தங்கள் தொகுதியில் உள்ள திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து வருகின்றனர்.

வெறிசோடிய தலைமைசெயலகம்

இதனால் தலைமைச்செயலகத்திற்கு இன்று எந்த அமைச்சர்களும் வராத காரணத்தால் வெறிச்சோடிய காணப்படுகிறது. மேலும் தமிழக பட்ஜெட் தொடர்பாக முதலமைச்சர் விஜய் தினந்தோறும் ஒவ்வொரு துறை அமைச்சர்களோடு ஆலோசனை நடத்தி வந்த நிலையில், இன்று எந்தவித ஆலோசனை கூட்டமும் நடைபெறவில்லை. முதலமைச்சர் விஜய்யும் எப்போதும் காலை 10 மணிக்கு தலைமைச்செயலகம் வந்து மாலை 5 மணி வரை பணிகளை பார்த்து வந்த நிலையில், இன்று முதலமைச்சர் விஜய்யும் தலைமைசெயலகம் வரவில்லை. இதனால் தலைமைச்செயலகம் வார நாட்களான இன்று ஞாயிற்றுக்கிழமை போல வெறிச்சோடி காணப்படுகிறது.

Related Post

GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

Posted by - செப்டம்பர் 5, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தில்…

மாமன்னன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் வடிவேலு.. இது செம கூட்டணி தான்

Posted by - டிசம்பர் 13, 2023 0
வடிவேலு இதுவரை நாம் அனைவரும் நடிகர் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால், முதல் முறையாக அவரால் சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும்…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய்-யின் முதல் படம்.. கைவிட்ட அனிருத்? கைதூக்கிவிடும் மியூசிக் டைரக்டர்

Posted by - நவம்பர் 23, 2024 0
விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்துக்கு இசையமைப்பது யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தன் தந்தை மாதிரி சினிமாவில் ஹீரோவாக…
Tamil Film Sequel News Collage

எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தின் டிரைலர் இதோ

Posted by - அக்டோபர் 21, 2026 0
மூக்குத்தி அம்மன் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாராவை வைத்து இயக்கி, நடித்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். கடந்த 2020ம் ஆண்டு வெளியான இப்படம் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி பேசப்பட்டது.…

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted by - டிசம்பர் 8, 2023 0
அமலா பால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன