உங்கள் மனைவியுடன் சண்டையிடும்போது சொல்லக் கூடாத 7 விஷயங்கள்… என்னென்ன தெரியுமா?

230 0
உறவுகளில் விவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படும் போது, ​​​​நாம் கோபத்தில் பேசும் வார்த்தைகள் சில நேரங்களில் மோதலை மோசமாக்கலாம். உதாரணமாக நீங்கள் உங்கள் மனைவியிடம் ஏற்படும் சண்டைகளின் போது பேசும் வார்த்தைகள் அவர்களின் வெறுப்பை அல்லது கோபத்தை மேலும் தூண்டிவிட கூடியதாக அமைந்து விடலாம்.

எனவே திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க உங்கள் மனைவியுடன் சண்டையிடும் போது நீங்கள் சொல்ல கூடாத 7 விஷயங்கள் பற்றி தெரிந்து வைத்திருப்பது அவசியம். கீழே காணப்போகும் 7 விஷயங்களை சிறிய சண்டைகளின் போது நீங்கள் செய்தால் கூட அது பெரிய சண்டையாக மாற வாய்ப்பு உள்ளது.

பிறருடன் ஒப்பிடுதல்:எந்த ஒரு விஷயத்திலும் உங்கள் மனைவியை மற்றவர்களுடன் குறிப்பாக கருத்து வேறுபாடுகள் நிலவும் போது ஒப்பிடவே ஒப்பிடாதீர்கள். நீ இதை சரியாக செய்யவில்லை, அவரை பார் இதே விஷயத்தை எவ்வளவு சிறப்பாக செய்கிறார் என்பது போன்ற வார்த்தைகளை சொல்வதை கட்டாயம் தவிர்க்கவும். இல்லை என்னால் இது பெரும் வாக்குவாதங்களுக்கு வழிவகுக்கும்.

அழகு பற்றி குறை சொல்வது:

சண்டை அல்லது வாக்குவாதங்களின் போது உங்கள் மனைவியின் அழகை பற்றி எதிர்மறையாக பேசி விடாதீர்கள். அது அவர்களின் மனதை மிகவும் காயப்படுத்துவதோடு, தீராத வடுவை அவர்களுக்குள் ஏற்படுத்தி விடும்.

மற்றவர்களுக்கு முன்னால் சண்டையிடாதீர்கள்:

உங்கள் இருவருக்குள்ளும் எவ்வளவோ சண்டைகள் வந்தாலும் அது ஒரு அறைக்குள் இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்தினர் முன்போ அல்லது வேறு நபர்கள் முன்பு சண்டையிட்டு உங்கள் மனைவியை திட்டவோ அல்லது குறைகளை கூறவோ செய்யாதீர்கள். அது அவர்களை மிகவும் வேதனை கொள்ள செய்யும்.

நீ என் வாழ்வில் இல்லாமல் இருந்தால்:

நீங்கள் மட்டும் என் வாழ்வில் இல்லாமல் உன்னை தவிர நான் வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தால் என வாழ்க்கை மிகவும் நன்றாக இருந்திருக்கும்’ என்று தவறியும் சொல்லாதீர்கள். நினைவில் கொள்ளுங்கள், இந்த வார்த்தைகள் உங்கள் மனைவியை மிகவும் காயப்படுத்தி உறவுக்குள் பெரும் விரிசலை ஏற்படுத்தி விட கூடும்.

அவமதிக்காதீர்கள்:

சிறிய அல்லது பெரிய சண்டையாக இருந்தாலும் எப்போதும் உங்கள் மனைவியை அவமதிக்கும் படி நடந்து கொள்ளாதீர்கள். இப்படி செய்வது உங்கள் இருவரையும் மனதளவில் தொலைவில் வைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மனைவி வீட்டினர் மீது புகார் சொல்லாதீர்கள்:

ஒவ்வொரு சிறிய விஷயத்திற்கும் கூட உங்கள் மனைவியின் குடும்பத்தினரைபற்றி குறை சொல்லாதீர்கள். எந்த மனைவிக்கும் இபப்டி செய்வது பிடிக்காது. மனைவி குடும்பம் பற்றிய உங்கள் கருத்துக்களை எக்காரணம் கொண்டும் வெளிப்படையாக சொல்லாமல் உங்கள் மனதிற்குள்ளேயே வைத்து கொள்வது திருமண வாழ்க்கைக்கு நல்லது.

எதையும் சரியாக செய்ய முடியாது:மோதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகளின் போது “உன்னால் எதையும் சரியாகச் செய்ய முடியாது” என்று அவர்களை குற்றம் சாட்டாதீர்கள். இப்படி சொல்வது அவர்களின் தன்னம்பிக்கையை குறைப்பதோடு, உங்கள் உறவை மோசமாக்கும்.

Related Post

செல்பி எடுத்து அசத்தும் விலங்குகள் !

Posted by - April 10, 2024 0
செயற்கை நுண்ணறிவு மூலம் விலங்குகள் செல்பி எடுப்பது போன்ற புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்தில் இன்றைய இளைஞர்கள் தங்கள் முகத்தைக் கண்ணாடியில்…

முடிவுக்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ்.. கிளைமாக்ஸ் போட்டோ வைரல்

Posted by - October 10, 2023 0
விஜய் டிவியில் கடந்த பல வருடங்களாக ஓடிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். 1300 எபிசோடுகளை கடந்து ஓடிவரும் அந்த தொடர் விரைவில் முடிவடைய…

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?… வெளிவந்த புரொமோ

Posted by - February 2, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் பெண்கள் எழுச்சிக்கான கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதைக்களம்…

நடிகர் விஷால் உடல் இப்படி ஆக குடிபோதை தான் காரணமா.. அவரே சொன்ன பதில்

Posted by - May 14, 2025 0
நடிகர் விஷால் மதகஜராஜா பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தபோது மேடையில் நடுக்கத்துடன் இருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. அவருக்கு வைரல் fever இருந்தது தான் அந்த நடுக்கத்துக்கு காரணம்…

எலிமினேட் ஆன விசித்ரா.. வெளியில் வந்த பின்பும் இப்படியா! கமல் முன்பே சொன்ன வார்த்தை

Posted by - January 8, 2024 0
பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று விசித்ரா வெளியேறி இருக்கிறார். பைனலுக்கு முந்தைய வாரம் என்பதால் வெளியே போகப்போவது யார் என்பது பற்றி ஒரு பெரிய குழப்பமே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *