“எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் விடாமல்..” – எஃப்ஐஆரில் வெளிவந்த ஞானசேகரனின் கோர முகம்!

215 0

பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரியாணி வியாபாரியாக உள்ள ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. மாணவி கூறிய புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட எஃப்ஐஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நண்பருடன் தனியாக இருந்ததை வீடியோவாக எடுத்த ஞானசேகரன், அதனை டீன், பேராசிரியரிடம் காண்பித்து டிசி தர வைப்பேன் எனக் கூறி மிரட்டினார் என்று அந்த மாணவி புகாரில் கூறியுள்ளார். மேலும், தான் சொல்வதை கேட்கவில்லை என்றால் மாணவியின் தந்தைக்கு வீடியோவை அனுப்பி விடுவேன் என்றும் இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என கூறி ஞானசேகரன் மாணவியை மிரட்டியதாக எஃப்ஐஆரில் சொல்லப்பட்டுள்ளது.

ஆண் நண்பரை மிரட்டி விரட்டிவிட்ட பின், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார் என்றும் எஃப்ஐஆரில் ஞானசேகரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

“நாங்கள் தனியாக இருந்ததை வீடியோ எடுத்து டீன், பேராசிரியரிடம் காண்பித்து TC தர வைப்பேன் என மிரட்டினான். செல்போனில் இருந்த எனது தந்தையின் எண்ணை எடுத்துக்கொண்டு அவருக்கு வீடியோ அனுப்புவேன் என மிரட்டினான்.

நாங்கள் இருவரும் எவ்வளவு கெஞ்சியும் எங்களை விடுவதாக இல்லை. அடிபணியவில்லை என்றால் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் எனக்கூறி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்தான்” வன்கொடுமை குறித்து மாணவி கூறிய பகீர் தகவல்கள் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், இந்த எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்தன்று நடந்தது என்னவென்பது எஃப்ஐஆரில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவரும், மாணவியும் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, அங்கு அடையாளம் தெரியாத 2 பேர் வந்து மாணவனை தாக்கியுள்ளனர். மாணவனை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரத்தில் பிரியாணி வியாபாரியாக உள்ள ஞானசேகரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஞானசேகரனின் செல்போனில் பல்வேறு வீடியோக்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றை கைப்பற்றியுள்ள காவல்துறையினர், ஞானசேகரன் இது போன்று வேறு ஏதேனும் மாணவிகளை வன்கொடுமை செய்துள்ளாரா என்றும் விசாரணையை செய்து வருகிறார்கள்.

Related Post

பிடிஆர் வசமாகும் 2 முக்கிய இலாகாக்கள்..! ஸ்டாலின் புது கணக்கு – ஆட்டம் போட்டவர்களுக்கு ஆப்பு?

Posted by - April 25, 2025 0
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதிய இலாக்காக்கள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.…

விஜய் எம்ஜிஆர் மாதிரி உதவி செய்யனும்… ரஜினியும் உதவவேண்டும் – செல்லூர் ராஜு விருப்பம்

Posted by - June 12, 2023 0
நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளதாகவும், அவர் மக்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முன் வர வேண்டும் எனவும் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டார். ஆர்ஜே.தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை அருகே…

மாதம்பட்டி ரங்கராஜ் மறுமண வழக்கில் வந்த அதிரடி தீர்ப்பு… ஜாய் கிரிசில்டா போட்ட வைரல் பதிவு

Posted by - November 4, 2025 0
மாதம்பட்டி ரங்கராஜ் தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். சினிமா படங்களை தாண்டி சமையல் தொழில் மூலம் தான்…

இதை கூறி தேர்தலை சந்தியுங்கள் பார்க்கலாம்.. இது எங்களின் சவாலாகும்

Posted by - January 31, 2025 0
கடந்த 1987ல் கள் இறக்கவும், குடிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *