ASS

ஓட்டு மிஷினில் 16வது இடம் விஜய்க்கா.? நோட்டாவிற்கா.? நடந்தது இது தான்- தேர்தல் ஆணையம் லேட்டஸ்ட் அப்டேட்

82 0

பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு 16வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது ஏன் எனவும், 16வது எண் நோட்டாவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தேர்தல் களத்தில் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கிய அவர், தமிழகம் முழுவதும் தனி அணியாக போட்டியிடுகிறார். அதிலும் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடவுள்ளார். இதனையடுத்து இந்த இரண்டு தொகுதிகளின் மீதும் அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது.

விஜய்க்கு 16வது இடம்

இதில் சென்னையில் பெரம்பூர் தொகுதியில் தவெகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வாக்குப்பதிவிற்கான பணியை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஓவ்வொரு வாக்காளரின் பெயர், புகைப்படம், சின்னம் ஆகியவற்றை இவிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டு வருகிறது. இதில் தவெக தலைவரும் வேட்பாளருமான விஜய்க்கு 16வது இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் தவெகவினர் ஒரு பக்கம் அதிர்ச்சி அடைந்திருந்த நிலையில், 16-ம் எண் நோட்டாவுடையது எனவும் இதில் வாக்களித்தால் யாருக்கும் எங்கள் வாக்களிக்க விருப்பமில்லையென நோட்டீஸ் பகிரப்பட்டது.

16வது இடம் ஒதுக்கப்பட்டது ஏன.?

இதனையடுத்து இது தொடர்பாக தேர்தல் ஆணையம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூர் தொகுதியில் வேட்பாளர் வரிசைப் பட்டியலில் 16-ம் எண், தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்டுள்ளது. பெரம்பூரை பொருத்த அளவில் 3 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பதிவு செய்யப்பட்ட கட்சியின் வேட்பாளர் என்ற முறையிலும் சி.ஜோசப் விஜயின் பெயரில் வரும் ’ஜோ’ என்ற முதல் எழுத்து, தமிழ் அகர வரிசையின் இறுதியில் வருவதால், அவரது பெயர் 16-ம் எண்ணாக இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

16வது இடம் நோட்டோவா- தேர்தல் ஆணையம் விளக்கம்

மேலும் 16-ம் எண் நோட்டாவுக்கானது (யாருக்கும் வாக்களிக்கவில்லை) என்று அங்கு கைப்பிரதிகள் கொடுக்கப்பட்டதாக புகார்கள் வந்தாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம்,  நோட்டாவை தேர்தல் கமிஷன் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தபோது அதை பிரபலப்படுத்துவதற்காக அச்சடிக்கப்பட்ட துண்டுப் பிரதிகள் தான் இது என தெரியவந்துள்ளது.

ஒரு வாக்குப்பதிவு எந்திரத்தின் கடைசி பட்டன் (16-ம் நம்பர் பட்டன்) நோட்டா என்பதை பிரபலப்படுத்துவதற்காக அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அந்த நோட்டீஸ் தேர்தல் பொருட்களாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை தவறுதலாக யாரோ எடுத்து வினியோகித்திருப்பதாக தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் பெரம்பூர் தொகுதியில் 3 எந்திரங்களை பயன்படுத்துவதால், மூன்றாவது எந்திரத்தின் கடைசி பட்டனாக நோட்டா இருக்கிறது. எனவே இதில் யாரும் குழம்ப வேண்டாம். 15 வேட்பாளர்கள் மட்டுமே போட்டிபோடும் தொகுதியில் மட்டும்தான் அந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா 16-வது இடத்தில் வைக்கப்பட்டு இருக்கும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

Related Post

qw

TVK ‘இன்ஸ்டன்ட்’ வெற்றிக்கு வித்திட்ட இன்ஸ்டாகிராம் ..

Posted by - May 5, 2026 0
தமிழக அரசியலில் 2024 – 2026 காலகட்டம் ஒரு மாபெரும் டிஜிட்டல் மாற்றத்துக்கான சாட்சியாக அமைந்தது என்றே சொல்ல வேண்டும். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்…

அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்!-ஆதவ் அர்ஜுனா த.வெ.க .

Posted by - July 18, 2025 0
அராஜக தி.மு.க அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்கள்! #Aadhavarjuna #TVK #Teachers_Protest #Tamilnadu_CM #pixeltv  #TamilNews #pixelmedia           குற்றவாளிகளைப் போல…

இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா… விஜய் தங்க ஹோட்டல் இல்லை என்று கைவிரிப்பு

Posted by - September 8, 2025 0
விஜய் தங்குவதற்கு திருச்சியில் உள்ள ஹோட்டல் அதிபர்கள் இடம் கொடுக்க மறுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. திருச்சி: அரசியல் சதுரங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்கள் காய் நகர்த்துகின்றனர். ஆனால் இதெற்கெல்லாம்…

அப்செட்டில் ராமதாஸ் – தலைவராகும் அன்புமணி? ஒகே சொன்ன நீதிமன்றம் – இன்று பாமக பொதுக்குழு

Posted by - August 9, 2025 0
அன்புமனி அறிவித்தபடி பாமக பொதுக்குழுவை கூட்ட எந்த தடையு,ம் விதிக்க முடியாது என, ராமதாஸின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. உட்கட்சி விவகாரம் தொடர்பான ராமதாஸ் சிவில்…
Gemini Generated Image gzfucmgzfucmgzfu

மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.

Posted by - April 9, 2026 0
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *