டிஆர்பி இல்லாததால் இழுத்து மூடப்படும் சன் டிவியின் முக்கியமான சீரியல்..

156 0

சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு எப்பொழுதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து மக்கள் மனதில் உயரத்தில் இருந்தது. ஆனால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி பின்னடைவை சந்தித்து வருகிறது. அதற்கு காரணம் விஜய் டிவி மற்றும் மற்ற சேனல்களில் வித்தியாசமான கதைகளத்துடன் மக்களுக்கு பிடித்த மாதிரி காட்சிகள் அமைந்து வருகிறது.

இதனால் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எதெல்லாம் பிரேம் டைமங்கில் போட்டும் டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை பார்த்து வருகிறதோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக முடித்துக் கொண்டு வருகிறார்கள். அப்படித்தான் எதிர்நீச்சல் கதையும் முடித்து விட்டார்கள். தற்போது சன் டிவியில் இரவு நேரத்தில் முக்கியமான சீரியலாக மக்கள் தூக்கி கொண்டாடிய சுந்தரி சீரியலும் முடிவுக்கு வர தயாராகி விட்டது.

 சுந்தரி சீரியல்

ஏற்கனவே சுந்தரி சீரியல் முதல் பாகம் வெளிவந்து மக்கள் பேராதரவு கொடுத்து வந்தார்கள். அதன்படி இரண்டாம் பாகத்தை கொண்டு வந்து வெற்றி என்ற புது கேரக்டரையும் கொண்டு வந்து மக்களுக்கு பிடித்த மாதிரியான காட்சிகளை அமைத்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரை வில்லனாக இருக்கும் முக்கியமான கதாபாத்திரமான கார்த்திக் கொஞ்சம் கூட திருந்தாத நிலையில் அவரை ஜெயிலுக்கு அனுப்பும் விதமாக கிளைமாக்ஸ் காட்சிகள் பரபரப்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் சுந்தரி குடும்பம் மற்றும் வெற்றி குடும்பத்தினர் இருவரும் சுந்தரிக்கும் வெற்றிக்கும் கல்யாணத்தை பண்ணி வைக்கலாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள். இதுவரை கார்த்திக் மாஸ்டர் என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் பாப்பாவும் கார்த்திக்கை வெறுக்கும் அளவிற்கு வெற்றியை அப்பாவாக ஏற்றுக் கொண்டார்.

இதனால் தமிழ் பாப்பாவை கடத்திட்டு போயி தன்னுடன் கூட்டிட்டு போகலாம் என்று நினைத்த கார்த்தியை துரத்தி போய் பிடித்த வெற்றி மற்றும் சுந்தரி இருவரும் சேர்ந்து தமிழ் பாப்பாவை காப்பாற்றி விட்டார்கள். அந்த வகையில் கார்த்திக் ஜெயிலுக்கு போகும் பொழுது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பூசணிக்காய் உடைக்க போகிறார் இயக்குனர்.

அடுத்ததாக சுந்தர் சீரியலுக்கு பதிலாக புத்தம் புது சீரியலாக மூன்று முடிச்சு சீரியல் வரப்போகிறது. இதில் விஜய் டிவி சீரியலில் ஈரமான ரோஜா நாடகத்தில் பிரியா கேரக்டரில் நடித்த சுவாதி ஹீரோயினாக வருகிறார்.

Related Post

பிக் பாஸ் வீட்டுக்குள்ள பல லட்சம் தொகையுடன் பணப்பெட்டி வந்துருச்சு.. எடுத்துக்கொண்ட வெளியேற போகும் நபர் இவரா

Posted by - January 2, 2024 0
பிக் பாஸில் இந்த வாரம் கடந்த எப்படி டிக்கெட் டு பினாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்றதோ, அதே அளவிற்கு விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாதது தான் இந்த…

😱 சின்னத்திரை நடிகைகள் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? | Inside Salary Secrets Revealed!”

Posted by - February 5, 2026 0
மூன்று முடிச்சு, கயல், அய்யனார் துணை, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை உள்ளிட்டபிரபல சீரியல்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின்ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வைரலாகி வருகிறது 🔥

பிரியாணி பிரியரா நீங்க.? பின்னாடியே இருக்குற ஆபத்து பெரிசு…

Posted by - June 18, 2025 0
உணவு குறித்து வரும் உயிரிழப்பு செய்திகள் பார்க்கும்போது இயல்பாகவே நமக்கு படபடக்க ஆரம்பித்துவிடும். அதிலும் குறிப்பாக சமீபமாக பிரியாணி – மாரடைப்பு குறித்து செய்திகளுமே வந்த வண்ணம்…

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Posted by - February 27, 2023 0
மணிமேகலை முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து…

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்துவிற்கு பதிலாக நடிக்கப்போவது அவருடைய.. இப்படியொரு முடிவு எடுத்துள்ளாரா

Posted by - September 19, 2023 0
மாரிமுத்து தன்னுடைய கதாபாத்திரத்தின் மூலம் எதிர்நீச்சல் சீரியலை பிரபலப்படுத்தியவர் மாரிமுத்து. இவர் ஏற்று நடித்த ஆதி குணசேகரன் எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக இந்தம்மா ஏய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *