டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600-ஐ கடந்தது

274 0

சென்னை:

தமிழகத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதேபோல, கொசு உற்பத்திக்கு வித்திடும் வகையில் தண்ணீரை அப்புறப்படுத்தாத நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்குவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் அதிகம் | Dengue fever - hindutamil.in

சென்னையில், ராஜீவ்காந்தி, ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது. நாள்தோறும் 20 முதல் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் 600-ஐ தாண்டி பதிவாகி உள்ளது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் 866 பேருக்கும், பிப்ரவரி மாதம் 641 பேருக்கும் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறையின் தீவிர நடவடிக்கைகள் மூலம் டெங்கு பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு குறைந்த அளவில் பதிவாகியது.

அதன்படி, மார்ச் மாதம் 512 பேரும், ஏப்ரல் மாதம் 302 பேரும், மே மாதம் 271 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். பின்னர், இது சற்று அதிகரிக்க தொடங்கி ஜூன் மாதத்தில் 364 பேரும், ஜூலை மாதத்தில் 353 பேரும் பாதிக்கப்பட்டனர். இதேபோல ஆகஸ்டு மாதத்தில் 535 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து டெங்கு பாதிப்பு கணிசமாக அதிகரித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் இம்மாதம் 610 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும், கடந்த 21-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை ஒரு வாரத்தில் மட்டும் 227 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் நேற்று வரை டெங்கு பாதிப்பு 4 ஆயிரத்து 454 ஆக பதிவாகியுள்ளது. டெங்கு பாதிப்புக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவும், சுழற்சி முறையில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடவும் அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Post

“2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்” – தவெக தலைவர் விஜய் அறிக்கை

Posted by - October 25, 2024 0
உங்கள் ஒவ்வொருவரையும் நேரில் சந்திக்கப் போகும் கணங்கள், நம்மிடையே இருக்கும் அன்பின் கனத்தை இன்னும் பலமடங்கு கூட்டப் போகின்றன. அதை வார்த்தைகளில் எப்படிச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.…

18 தலைமை காவலர்கள் பணியிடமாற்றம்!

Posted by - September 30, 2024 0
சேலம் மாவட்டத்தில் 18 தலைமை காவலர்களை பணியிட மாற்றம் செய்து காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். தீவட்டிபட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் மாமூல்…

பிறந்த நாளில் வாழ்த்திய அனைவருக்கும் நன்றி- உதயநிதி பதிவு …

Posted by - November 30, 2022 0
பிறந்த நாள் அன்று என்னை வாழ்த்திய, முதல்-அமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியினர், மாற்றுத்திறனாளி தோழர்கள், திருநங்கை-திருநம்பிகள், கலைத்துறையினர், சமூக வலைதள தன்னார்வலர்கள், பத்திரிகை மீடியாவினர்…

சோனியின் புதிய தமிழ் அலைவரிசை!

Posted by - February 9, 2026 0
சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில வித்தியாசமான முயற்சிகளுடன் தொடர்ந்து…

500 பள்ளிகள் தத்துகொடுப்பது: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் விளக்கம்

Posted by - January 2, 2025 0
அரசு பள்ளிகளின் வளர்ச்சியில் CSR மூலம் தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இருக்கும் என்று தான் சொன்னோம். தமிழ்நாட்டில் 500 அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு தத்துக்கொடுப்பதாக தகவல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *