”தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா… மக்களை ஏமாற்றும் பட்ஜெட்…” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

234 0

தமிழக பட்ஜெட்டை புறக்கணித்து வெளியே வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் மக்களை ஏமாற்றும் மின் மினிப்பூச்சி பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சட்டபேரவை நிதிநிலை அறிக்கையை புறக்கணித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து விட்டதாக குற்றம் சாட்டினார். அத்துடன், இதுவரை இல்லாத அளவிற்கு 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது, அதிமுகவினர் மீது பொய் வழக்குகள் போடுவது, அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாததை கண்டித்தும் அதிமுக வெளிநடப்பு செய்ததாக விளக்கம் அளித்தார். மேலும், மூன்று முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த போதும் அனைத்து வரிகளையும் உயர்த்தியது தான், மக்களுக்கு திமுக அரசு அளித்த பரிசு என்றும் விமர்சித்தார்.

மக்களை ஏமாற்றும் நிதி நிலை அறிக்கை இது, இந்த நிதிநிலை அறிக்கையை ஒரு மின் மினி பூச்சாக பார்ப்பதாகவும் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் இது எவ்வித வெளிச்சத்தையும் தராது என தெரிவித்தார்.

அனைத்து மகளிருக்கும் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறிவிட்டு தற்போது தகுதியின் அடிப்படையில் வழங்குவதாக கூறுகிறார்கள். எந்த அடிப்படையில் தகுதி நிர்ணயம் செய்கிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும் என கூறினார்.

வரி வருவாய் அதிகமாக இருக்கும் பட்சத்தில் பற்றாக்குறை பூஜ்ஜியமாக இல்லாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து பேசிய அவர், சட்டபோராட்டங்கள் நடத்துவதுதான் நீட் தேர்வு ரகசியமா, நாங்கள் அதை செய்யவில்லையா, நீட் தேர்வு ரகசியத்தை வெளியிட்ட உதயநிதிக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related Post

மாஃபியா அராஜகம்..! தப்பை தட்டிக் கேட்டால் கொலையா? என்ன நடக்குது தமிழ்நாட்டில்? அரசு வேடிக்கை?

Posted by - February 15, 2025 0
மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் மாணவன் உட்பட இருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றத்தை தட்டிக் கேட்டால் கொலை செய்யும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

மின்வாரிய ஊழியர்களை தாக்கிய திமுகவினர் : அண்ணாமலை கண்டனம்!

Posted by - April 22, 2025 0
மின்வாரிய ஊழியர்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்…

நகை திருட்டு புகாரில் உண்மை இல்லை; இது காவல் மரணமே – அஜித்குமார் வழக்கில் சிபிஐ அறிக்கை

Posted by - February 4, 2026 0
அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் 5 பேர் ஜாமீன் வழங்கக் கோரி மதுரை அமர்வில்…

செயலற்று கிடக்கும் மாநகராட்சி;கும்பகோணத்தில் நாய்கள் தொல்லை – பொதுமக்கள் அச்சம்!

Posted by - February 22, 2025 0
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலக்காவேரி பகுதியில் அளவுக்கு அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால்…

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – அடுத்த 3 மணிநேரம் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்

Posted by - December 11, 2023 0
தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது. தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *