தமிழ் புத்தாண்டை குறிவைத்து நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் ஐந்து படங்களின் லிஸ்ட் இதோ

225 0

வரும் தமிழ் புத்தாண்டை ரணகளம் ஆகும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த ராகவா லாரன்ஸின் ருத்ரன் திரைப்படம் ஒரு வழியாக திரையரங்கில் ரிலீஸ் ஆகிறது.

ருத்ரன்: ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகும் நடித்திருக்கும் படம் ருத்ரன். பைவ் ஸ்டார் கதிரவன்அறிமுகமாகும் ருத்ரன் படத்தை தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘பாடாத பாட்டெல்லாம்’ என்ற ரீமிக்ஸ் பாடல் வீடியோ சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது. இதனால் இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. ரசிகர்களும் இந்த படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கும் நிலையில் ஒரு வழியாக படத்தை ரிலீஸ் செய்யப் போகின்றனர்.

பிச்சைக்காரன் 2:கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல், அவரே இந்த படத்தை இயக்கியும் தயாரித்து உள்ளார். மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி ஒரு வழியாக அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். மேலும் இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி திரையரங்கில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

பார்டர்: இயக்குனர் அறிவழகன் இயக்கி ஆல் இன் ஒன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பார்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் ஒரு வழியாக தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இறுதியான முடிவை படக்குழு அறிவித்துள்ளது..

சகுந்தலம்: தெலுங்கு முன்னணி இயக்குனரான குணசேகரன் இயக்கத்தில், காளிதாசன் எழுதிய புராணத்தில் உள்ள சகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஒரு புராணத் திரைப்படம் உருவாக்கியுள்ளனர். இந்த படத்தில் சமந்தா மற்றும் தேவ் மோகன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப்போன நிலையில் கடைசியாக வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

துருவ நட்சத்திரம்: கௌதம் மேனன்-விக்ரம் கூட்டணியில் உருவான துருவ நட்சத்திரம் படத்தின் டீசர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது மீண்டும் அதன் படப்பிடிப்பு 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு சமீபத்தில் தான் நிறைவடைந்துள்ளது. பை ஆபரேஷன் திரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சியான் விக்ரமுடன் ரிது வர்மா, சிம்ரன், பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் விக்ரம் ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டிருக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.

இவ்வாறு இந்த ஐந்து படங்களும் வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த படங்களாகும். அதிலும் ராகவா லாரன்ஸின் ருத்ரன் மற்றும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2, சமந்தாவின் சகுந்தலம், விக்ரமின் துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் இடையே கடும் போட்டி நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Post

யாருமே கண்டு கொள்ளாத வெங்கட் பிரபு.. சிதறு தேங்காய் போல் உடைந்த 60028 டீம்

Posted by - January 27, 2025 0
விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கும்போது தினமும் சமூக வலைதளத்தில் இவரை பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார் என்பதே…

2022: எக்கச்சக்க எதிர்பார்ப்பு.. ஆனாலும் ஏமாற்றம்.. 2022ல் புஷ்வானமாகிய படங்களின் லிஸ்ட்!

Posted by - December 26, 2022 0
2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ஏமாற்றத்தைக் கொடுத்த படங்களின் பட்டியலை  காணலாம். கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான மாறன் படம்…

பல கோடி நஷ்டம், கொடுத்த வாக்கை காப்பாத்தல.. கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

Posted by - May 3, 2024 0
நடிகர் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படம் 2015ல் வெளிவந்தது. ஆனால் மக்களிடம் வரவேற்பை பெறாததால் பெரிய தோல்வியடைந்தது. அதனால் அந்த படத்தை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…

ஒவ்வொரு வடுவும் ஒரு கதையை சுமந்து செல்கிறது.. கங்குவா அதிரடி அப்டேட்

Posted by - July 20, 2023 0
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை…

ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - November 9, 2025 0
ஆண்பாவம் பொல்லாதது கடந்த வாரம் திரைக்கு வந்த ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது.இப்படத்தை அறிமுக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *