“மணி பிளான்ட்” வீட்டில் வைத்தால் பணம் சேரும் என்பது உண்மையா?

198 0

Money plant மணி பிளான்ட் வைத்தால் பணம் வரும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் எங்கு, எப்படி வைத்தால் பணம் வரும், மணி பிளான்ட்டின் தன்மை என்பது பற்றி பலருக்கும் தெரியாது. அதன் தன்மையை, ஆற்றலை தெரியாமலேயே மணி பிளான்ட்டை தவறாக வைத்து வளர்த்து பணம் வரவில்லை, கஷ்டம் தான் வருகிறது என புலம்புபவர்கள் அதிகம்.

 

மணி பிளான்ட் நிஜமாகவே பணத்தை ஈர்க்கும் என்றால் ஒரு செடிக்கும் செல்வ வளத்திற்கும், தெய்வீக அருள் பெருகுவதற்கும் என்ன தொடர்பு என பலர் நினைக்கலாம். எப்படி மணி பிளான்ட் பணத்தை வீட்டில் சேர வைக்கிறது என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஜோதிட சாஸ்திரத்திற்கு அடுத்த படியாக அதிகப்படியானவர்களால் நம்பப்படுவது வாஸ்து சாஸ்திரம். இதே போல் விருட்ச சாஸ்திரமும் பிரபலமாக இருக்கும் ஒன்றாகும். அப்படி விருட்ச சாஸ்திரம் அடிப்படையில் உண்டானது தான் வீட்டில் மணி பிளான்ட் வைக்கும் நம்பிக்கை.

மணி பிளான்ட் money plant வீட்டில் வைத்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். கடன் பிரச்சனைகள் தீரும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நீண்ட காலம் இருந்து வருகிறது. ஆனாலும் மணி பிளான்டாடை வீட்டில் எந்த இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும், எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த திசையில் வைக்கக் கூடாது என பல விதமான சந்தேகங்களும் கேள்விகளும் பலருக்கும் இருந்து கொண்டு தான் உள்ளது. மணி பிளான்ட் வளர்த்தால் நிஜமாகவே பணம் சேருமா என்ற சந்தேகமும் பலருக்கு உள்ளது. அவர்களுக்கான பதிவு தான் இது.

மணி பிளான்ட் என்பது காற்றில் உள்ள மாசுக்களை உறிஞ்சுக் கொண்டு, சுத்தமான காற்றினை வெளிவிடும் தன்மை கொண்டதாகும். காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்க்கும் தன்மை கொண்டது. அதிகமான ஆக்சிஜனை வெளியிடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் எளிதில் சுவாசிக்க முடியும். வீட்டில் டிவி, மொபைல் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் ஈர்த்து, வீட்டில் அமைதியான சூழலை தரக் கூடியது.

அதோடு நேர்மறை ஆற்றல்களை வீட்டில் அதிகரிக்க செய்யும் தன்மை மணி பிளான்டிற்கு உண்டு. இதனால் வீட்டில் இருப்பவர்களின் உடல் நிலையும் மன நிலையும் பாதுகாக்கப்படுவதால் அங்கு சுபிட்சமான சூழல் ஏற்படுகிறது. இந்த செடி இரவில் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடும் என்பதால் படுக்கையறையில் வைக்கக் கூடாது.

மணி பிளான்ட் வைக்கும் திசை :

மணி பிளான்ட் வைக்கும் திசை :

மணி பிளான்டினை வீட்டிற்கு உள்ளோ அல்லது வெளியிலோ வைத்து வளர்க்கலாம். தென்கிழக்கு திசையில் வைத்தால் அதிக பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என வாஸ்து நிபுணர்கள் சொல்வதுண்டு. தென்கிழக்கு என்பது விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திசை என்பதாலும் அங்கு வைப்பது சிறப்பானது. வடக்கு திசையில் வைக்கக் கூடாது.

மணி பிளான்ட் பணத்தை ஈர்க்குமா ?

மணி பிளான்ட் பணத்தை ஈர்க்குமா ?

மணி பிளான்ட் நேர்மறை ஆற்றல்களை அதிகம் தரக்கூடியது. எதிர்மறை ஆற்றல்கள், காற்றில் உள்ள மாசுக்கள், நோய்களை உண்டாக்கும் காரணிகளை ஈர்த்துக் கொள்ளக் கூடியது. பொதுவாக தென்கிழக்கு, கிழக்கு திசைகள் விநாயகர் மற்றும் மகாலட்சுமியின் ஆற்றல் அதிகம் உள்ள திசைகளாக சொல்லப்படுகிறது. இந்த திசைகளில் தீமைகளை ஈர்த்து, அழிக்கும் தன்மை கொண்ட மணி பிளான்ட், உப்பு, மிளகு போன்ற பொருட்களை வைப்பதால் தீயசக்திகள் அழிந்து, செல்வ வளம் பெருகும். இதனால் கடன் போன்ற பிரச்சனைகளும் குறையும்.

மணி பிளான்ட் வைக்க சரியான இடம்

மணி பிளான்ட் வைக்க சரியான இடம்

மணி பிளான்ட்டை பூஜையில் வைத்து வளர்ப்பது பல மடங்கு அதிகமான பலன்களை தரும். பூஜை அறை என்பது தெய்வீக ஆற்றல் நிறைந்திருக்கும், மன அமைதியை தரும் இடமாகும். இங்கு கூடுதல் சக்தியாக பாசிடிவ் எனர்ஜியை அதிகம் தரும் மணி பிளான்ட்டை வளர்த்தால் செல்வ வளம் பெருகுவதற்கான சக்தி அதிகரிக்கும். நாம் தினமும் பூஜை செய்யும் போது அதன் தெய்வீக தன்மையை மணி பிளான்ட் அதிகம் ஈர்த்து, வீட்டில் எப்போதும் தெய்வத்தின் அருள் நிலைத்திருக்க செய்யும்.

Related Post

காலை வெறும் வயிற்றில் இதை குடித்தால் உடலில் என்ன மாற்றம்? மருத்துவர்கள் சொல்லும் உண்மை

Posted by - February 9, 2026 0
இன்றைய வாழ்க்கை முறையில் பலர் வயிற்றுப் பிரச்சனை, உடல் சோர்வு, எடை அதிகரிப்பு போன்ற சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கான ஒரு எளிய தீர்வாக, காலை வெறும் வயிற்றில்…

அதுக்குள்ள விவாகரத்தா?.. உருக்கமாக பேசிய ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா!!

Posted by - April 30, 2024 0
இந்திரஜா பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் திரையுலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் பிரமாண்டமாக நடந்தது. கோலாகலமாக நடந்து முடிந்த இந்த…

ஒரே பதிவில் மெய்யழகனை குத்தி கிழிச்ச ப்ளூ சட்டை மாறன்.. மன்னிப்பு தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை!

Posted by - September 30, 2024 0
‘திருப்பதி லட்டு’ விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதால்தான் மெய்யழகன் படம் இரு மாநிலங்களிலும் ஓடவில்லை என்று பிரபல சினிமா விமர்சகர் கிண்டலடித்துள்ளார். 96 என்ற சூப்பர் ஹிட் படத்திற்குப்…

பிக் பாஸ் பிரதீப் ஆண்டனிக்கு திருமணம்.. பொண்ணு யார் தெரியுமா! இதோ புகைப்படம்

Posted by - June 17, 2024 0
பிரதீப் ஆண்டனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இதில் ஏற்பட்ட சில சர்ச்சையின் காரணமாக நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். 2016ஆம் ஆண்டு…

இது பிக்பாஸா இல்ல மேட்ரிமோனியா.. திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

Posted by - December 27, 2024 0
பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. இதற்கு காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தான்.அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் முத்துவின் அம்மா அப்பா வெள்ளந்தியாக பேசியது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *