ரசிகர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் போதவில்லை – நடிகர் அஜித் உருக்கம்!

186 0

“எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது” என நடிகர் அஜித்குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லை. இந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது” என நடிகர் அஜித்குமார் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்று முடிந்த துபாய் 24H கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி 3வது இடத்தை பிடித்தது. இதையடுத்து அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் அஜித் தனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், “அன்பான அனைவருக்கும் வணக்கம்! துபாய் கார் பந்தய ரேஸின் போதும் நிகழ்வுக்கு பின்னரும் இப்போதும் எப்போதும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லாம் வல்ல இறைவன், எனது குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டுப் பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் எனது அன்புக்குரிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் போதவில்லைஇந்த அசைக்க முடியாத அன்பும் ஊக்கமும்தான் எனது ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக உள்ளது. என் முன் இருக்கும் சவால்களை உடைத்து மோட்டார் ஸ்போர்ட்டில் புதிய சாதனைகள் படைக்கவும் தூண்டுதலாக உள்ளது. இந்த பயணம் என்னைப் பற்றியது மட்டுமல்ல! உங்களைப் பற்றியதும்தான். நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிக்க ஒவ்வொரு நொடியும் நான் கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துக்கள். நன்றி!” என பதிவிட்டுள்ளார்.

Related Post

புதிய ஆலியா மானசா.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

Posted by - November 30, 2022 0
சரிகம தயாரிப்பு நிறுவனம் தற்போது தயாரித்துள்ள மெகாத் தொடர் இனியா. இந்த தொடரில் நடிகை ஆலியா மானசா கதாநாயகியாக நடிக்கிறார். சரிகம தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு புதிய…

முழங்கால் வலி இருக்கா? கற்பூரவள்ளி ஒன்னு போதுமே.. மூட்டு வலியை விரட்டியடிக்கும் 10 டிப்ஸ்கள் பாருங்க

Posted by - December 20, 2023 0
சென்னை: பாடாய் படுத்தும் முழங்கால் வலி, மூட்டுவலிக்கு எளிய முறையிலேயே நிவாரணம் தேடலாம்.. அந்தவகையில், வீட்டிலிருக்கும் ஒருசில பொருட்களை வைத்தே, தீர்வை காணலாம். முழங்கால் வலி, மூட்டுவலிகளுக்கு…

ஸ்ரீபெரும்புதூர் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் 2வது நாளாக ஐடி ரெய்டு

Posted by - September 28, 2023 0
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃப்ளெக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்கள், அலுவலகங்கள் மற்றும் ஆவடி, சிப்காட் பகுதிகளில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக…

சோனியின் புதிய தமிழ் அலைவரிசை!

Posted by - February 9, 2026 0
சோனி நிறுவனம் தனது புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி சேனல்களில் பல சர்வதேச நிறுவனங்கள் தமிழ் மொழிக்கு ஏற்ப சில வித்தியாசமான முயற்சிகளுடன் தொடர்ந்து…

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்: 3 நாள் ஓய்வுக்கு பிறகு வழக்கமான பணிகளை மேற்கொள்வார்

Posted by - July 28, 2025 0
சென்னை: சென்னை அப்​போலோ மருத்​து​வ​மனை​யில் இருந்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று மாலை டிஸ்​சார்ஜ் செய்யப்பட்டார். 3 நாள் ஓய்​வுக்கு பிறகு வழக்​க​மான பணி​களை மேற்​கொள்​ளவுள்​ளார். திமுக தலை​வரும், தமிழக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *