விளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவிளம்பர மோகம்; பம்மாத்து நாடகம்; இதுக்குகூடவா மனம் வரவில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்வில்லை: பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின்

198 0

எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?

 

எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை என மத்திய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே?

எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?

நெடுஞ்சாலைகள் – இரயில்வே திட்டங்கள் – கோவை, மதுரை மெட்ரோ இரயில் எதையுமே கொடுக்காதது ஏன்? எது தடுக்கிறது?

பொருளாதார ஆய்வறிக்கை, உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை அறிக்கை, நிதி ஆயோக் அறிக்கை என ஒன்றிய அரசின் அனைத்து அறிக்கைகளிலும் முதன்மையான இடத்தைப் பிடிக்கிறது தமிழ்நாடு. பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?

தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும் மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா?

ஒன்றிய அரசானது தன்னுடைய திட்டங்களில் தன்னுடைய பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்துக் கொண்டே வருகிறது. பல்வேறு திட்டங்களில் மிகவும் குறைவாக மானியத் தொகையை வழங்கும் ஒன்றிய அரசு, அதிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது. விளம்பர மோகம் கொண்ட ஒன்றிய அரசு, திட்ட விளம்பரங்களில் ஒன்றிய அரசின் முத்திரை இடம் பெறாவிட்டால், திட்டம் சரியாகவும் செம்மையாகவும் செயல்படுத்தப்பட்டிருப்பினும், நமக்குச் சேரவேண்டிய திட்ட நிதியை விடுவிப்பதில்லை. விளம்பரம் ஒன்றையே பாராட்டும் ஒன்றிய அரசு, மக்கள் நலனில் எந்தவொரு அக்கறையையும் காட்ட மறுக்கிறது.

வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.,வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.

எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Post

கச்சா எண்ணெய் விலை உயர்வு: பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு

Posted by - September 7, 2023 0
புதுடெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 90 டாலர், அதாவது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.7,470 ஐ நெருங்குகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை…

கேரளாவில் கடந்த 2 ஆண்டுகளில் 15,325 விஷ பாம்புகள் பிடிபட்டன

Posted by - February 20, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் காடுகள் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மலைகிராமங்களில் பாம்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. விஷ பாம்புகள் கடித்து பலர் பலியாகி உள்ளனர். இந்த பாம்புகளை…

இன்று அதல பாதாளத்தில் பங்குச்சந்தை! காரணம் என்ன? எப்படி மீள்வது? என்ன செய்ய வேண்டும்?

Posted by - April 7, 2025 0
இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை அதாவது இன்று பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. இந்த வாரத்தை மிகப்பெரிய சரிவுடன் பங்குச் சந்தை தொடங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் திங்கட்கிழமை…

அசாமில் மார்க்கெட்டில் தீவிபத்து- 150 கடைகள் சேதம்

Posted by - February 17, 2023 0
அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரின் மையப் பகுதியில் உள்ள சவுக் பஜார் மார்க்கெட்டில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கடைகள் நெரிசலாக இருந்ததால்…

45 நாட்களில் ரூ.4 கோடியை அள்ளிய ஆந்திரா தக்காளி விவசாயி

Posted by - July 31, 2023 0
சித்தூர்: எளிய காய்கறியான தக்காளிதான் இன்று இல்லத்தரசிகளுக்கு ‘கிலி’யை ஏற்படுத்துகிறது. அரைச்சதம், சதம், ஒன்றரைச் சதம் என்று ‘இரட்டைச் சதத்தை’ நோக்கி ‘நாட் அவுட்’டாக முன்னேறிக்கொண்டிருக்கும் தக்காளி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *