“வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டார்… தோல்வியடைந்த நடிகர் முதலமைச்சராகிவிட்டார்…” – அண்ணாமலை பேச்சு

233 0

10 தலைவர்களின் புகைப்படத்தை போட்டால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளும் வந்துவிட்டதாக அண்ணாமலை சாடல்.

தாம் வெளியூர் சென்ற 3 மாத காலத்தில் ஒரு நடிகர் அரசியலுக்கு வந்துவிட்டதாகவும், மற்றொரு நடிகர் துணை முதல்வர் ஆகிவிட்டதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் கல்வி பயில்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் லண்டன் சென்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நேற்று தமிழகம் திரும்பினார்.

இதையடுத்து கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ‘வாய்ஸ் ஆஃப் கோவை’ என்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.அப்போது பேசிய அண்ணாமலை, “நான் வெளியூர் சென்றிருந்த இந்த மூன்று மாத காலத்தில் வெற்றி பெற்ற நடிகர் அரசியலுக்கு வந்து விட்டார். தோல்வி அடைந்த நடிகர் துணை முதலமைச்சராகிவிட்டார்” என விஜயையும் உதயநிதி ஸ்டாலினையும் பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டினார்.மேலும் 10 தலைவர்களின் புகைப்படத்தை போட்டால் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளும் வந்துவிட்டதாகக் கூறிய அவர், பிரதமர் மோடியைப் போன்று மக்களுக்கு எதிர்காலத்தில் எது தேவை என்பதை தொலைநோக்கு பார்வையுடன் செய்கின்ற அரசியல்வாதிகள் மிக மிக குறைவு எனத் தெரிவித்தார்.

Related Post

”பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்துக்கு பாடம் புகட்டும்” தவெகவுக்கு சவால்விட்ட சேகர்பாபு!

Posted by - March 20, 2026 0
பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஆற்றல்மிக்க தலைவவரை விமர்சிப்பவர்களை, தன் தாயே தடுத்தாலும் திமுக தொண்டன் எதிர்ப்பான். பவளவிழா இயக்கம் பால்வாடி இயக்கத்திற்கு பாடம் புகட்டும்- சேகர்பாபு…

மு.க.ஸ்டாலினே வந்து உட்கார்ந்தாலும் கோவையில் பாஜகதான் வெற்றி பெறும் – அண்ணாமலை சவால்

Posted by - March 23, 2024 0
தமிழ்நாட்டின் அரசியல் மாற்றம் கோவை தொகுதியில் இருந்து தொடங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார் . கோயம்புத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே தங்கியிருந்து பரப்புரை செய்தாலும், அதிக வாக்குகள் வித்தியாசத்தில்…

விஜய்க்கு ஆட்டோ ஓடாதாம்.. புதிய சின்னத்தை தேடுவதில் தவெக தீவிரம் – லிஸ்டில் இருப்பது என்ன?

Posted by - August 23, 2025 0
TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தமிழக வெற்றிக் கழகம், ஆட்டோவை பொது சின்னமாக பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. TVK Symbol: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில்…

“சபரீசன் ‘சூப்பர் சிஎம்’ ஆக செயல்படுகிறார்” – அண்ணாமலை குற்றச்சாட்டு

Posted by - April 18, 2026 0
கோவை: தமிழகத்தில் ‘சூப்பர் சிஎம்’ ஆக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் செயல்படுகிறார் என அண்ணாமலை கூறினார். கோவை தெற்கு தொகுதியில் எம்எல்ஏ வானதிசீனிவாசன் மேற்கொண்ட சிறப்பு பணிகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *