அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில் அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை

338 0

சென்னை:

எல்லா விதமான நோய்களுக்கும் ஏற்ற மருந்து ஒன்று இருக்கிறதென்றால் அதுவும் இந்த அருகம்புல்தான்.. அத்தனையும் மருத்துவம்.. அத்தனையும் மகத்துவம்..!!

வெறும் புல்தானே என்று இதை நினைத்து ஒதுக்கிவிட முடியாது.. காரணம், மாவுச்சத்து, உப்புச்சத்து, நீர்த்த கரிச்சத்து, அசிட்டிக் அமிலம், கொழுப்புச்சத்து, ஆல்கலாய்ட்ஸ், அருண்டோயின், பி.சிட்டோஸ்டர், கார்போஹைட்ரேட், கவுமாரிக் அமிலச்சத்து, பெரூலிக் அமிலச்சத்து, நார்ச்சத்து, லிக்னின், மெக்னீசியம், பொட்டாசியம், பால்மிட்டிக் அமிலம், செலினியம், டைட்டர் பினாய்ட்ஸ், வேனிலிக் அமிலம், வைட்டமின் C, A சத்துக்கள் என பல்வேறு சத்துக்களை ஒளித்து வைத்திருக்கிறது இந்த அருகம்புல்.

எந்தவிதமான சூழ்நிலைகளிலும் வளரக்கூடிய தன்மை இந்த அருகம்புல்லுக்கு உண்டு.. சர்க்கரை நோய், ஆஸ்துமா, மண்ணீரல் கோளாறு முதல் சொறி சிரங்குவரை தீர்க்கக்கூடிய மருத்துவ தன்மை இந்த புல்லுக்கு இருக்கிறது.அருகம்புல்.. அனைத்து நோயை ஓட்டும் ஒரே மருந்து.. வெறும் வயிற்றில்  அருகம்புல்லின் ஜூஸ் போதுமே.. அருமை | Do you know the Amazing Health  Benefits of Arugampul and Scutch ...

அருகம்புல் பொடி:

இந்த புல்லில் சாறு தயாரித்து குடிக்கலாம்.. அருகம்புல் பொடி என்றே கடைகளில் விற்கிறார்கள்..இந்த பவுடரை பாலிலோ, வெந்நீரிலோ கலந்தும் பயன்படுத்தலாம். உடலிலுள்ள கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றும் குணம் அருகம்புல்லுக்கு. அதனால்தான், உடல் எடை குறைய வேண்டும் என்று முயற்சிப்பவர்கள், முதலில் கையில் எடுப்பது அருகம்புல் சாறாக உள்ளது. அதனால்தான், வாக்கிங், ஜாக்கிங் என உடற்பயிற்சி செய்யும் பகுதிகளில் எல்லாம் அருகம்புல் ஜூஸ் படுஜோராக விற்பனையாகி கொண்டிருக்கிறது.

கெட்ட கொழுப்பு:

இந்த ஜூஸ் குடிப்பதால், உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறையும்.. அருகம்புல்லை தண்ணீரில் அலசிவிட்டு, சுத்தமான தண்ணீரை சேர்த்து இடித்தோ அல்லது மிக்ஸியில் அரைத்தோ, சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கலாம். இதில் சிறிது துளசியை சேர்த்துக்கொண்டால் இன்னும் நல்லது.. நாட்டு வெல்லம் சேர்த்தும், கரும்புச்சாறுடன் கலந்தும் இந்த அருகம்புல் ஜூஸ் குடிக்கலாம். ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யக்கூடியது இந்த அருகம்புல்.. ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை வெளியேற்றக்கூடியது..

கண் பார்வை திறனை அதிகப்படுத்தக்கூடியது.. நினைவுத்திறனை பெருக்கக்கூடியது.. மன உளைச்சல், மன இறுக்கத்தை போக்கக்கூடியது.. உடலை பலப்படுத்தக்கூடியது.. குடல் புண்களை ஆற்றக்கூடியது.. சிறுநீர் பெருக்கை அதிகப்படுத்தக்கூடியது.. எனவே, சர்க்கரை நோயாளிகள் அருகம்புல் ஜூஸ் குடித்து வரலாம்..

ஒரே மருந்து:

அதுமட்டுமல்ல, மூளை பாதிப்பு, தாது விருத்தி, குடைச்சல், வாய்வு, வயிற்று நோய், மூல நோய், ரத்தக்கொதிப்பு, பித்தம், உஷ்ண வியாதிகள், ஆஸ்துமா, கைகால் வலி, சோர்வு என ஒட்டுமொத்த பிரச்சனைகளுக்கும், ஒரே மருந்தாக திகழ்கிறது அருகம்புல் ஜூஸ்..

சிறுநீர் பையில் உள்ள கல் நீங்க வேண்டுமானாலும், நரம்பு தளர்ச்சி நீங்க வேண்டுமானாலும், இதய கோளாறு குணமாக வேண்டுமானாலும், தோல் வியாதிகள் குணமாக வேண்டுமானாலும், அதற்கும் இந்த அருகம்புல் ஜூஸ்தான் உதவுகிறது.

தாய்ப்பால் :

தாய்ப்பாலை பெருக்கவும் இந்த அருகம்புல் உதவுகிறது.. கெட்டிப்பட்ட சளியை கரைத்து வெளியேற்றவும் இந்த அருகம்புல் உதவுகிறது.. வாந்தியை தடுக்கவும் இந்த அருகம்புல் உதவுகிறது.. ஈரல் நோய்களுக்கம் இந்த அருகம்புல் உதவுகிறது. இந்த பிரச்சனைகளை எல்லாம் கட்டுப்படுத்த, யுனானி மருத்துவத்துக்கும் அருகம்புல் பரிந்துரைக்கப்படுகிறது. புல், பூண்டுகளிலும் மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கின்றன என்பதற்கு உதாரணம்தான் இந்த அருகம்புல்..

Related Post

Rewind 2023: ‘காவாலா’ முதல் ‘காட்டுமல்லி’ வரை – டாப் 10 யூடியூப் வியூஸ் பாடல்கள்

Posted by - December 26, 2023 0
தமிழ் சினிமா 2023-ம் ஆண்டில் அதிக பார்வைகளைப் பெற்ற யூடியூப் பாடல்கள் வரிசையில், ‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘வாரிசு’, பாடல்கள் முட்டி மோதிக்கொள்கின்றன. பாடல் வரவேற்பை பெற்றது ஒரு…

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை சரியில்லையா? என்ன ஆனது

Posted by - December 31, 2024 0
தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இன்று உலகளவில் பிரபலமான நடிகராக மாறியுள்ளார் தனுஷ் இதில் இவர் இயக்கி வரும் 4வது திரைப்படம் தான் இட்லி கடை. இப்படத்தில் நித்யா…

விஜய் எம்ஜிஆர் மாதிரி உதவி செய்யனும்… ரஜினியும் உதவவேண்டும் – செல்லூர் ராஜு விருப்பம்

Posted by - June 12, 2023 0
நடிகர் ரஜினிகாந்த் கோடிக்கணக்கான பணம் வைத்துள்ளதாகவும், அவர் மக்களுக்கு தொடர்ந்து உதவிசெய்ய முன் வர வேண்டும் எனவும் செல்லூர் ராஜு கேட்டுக்கொண்டார். ஆர்ஜே.தமிழ்மணி சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மதுரை அருகே…

“திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டு கண்கள்…” – விஜய் முன்னிறுத்தும் கொள்கை இதுதான்!

Posted by - October 28, 2024 0
திராவிடமும், தமிழ் தேசியமும் இரண்டு கண்கள் மாதிரி எனவும், ஆனால் எந்த அடையாளத்துக்குள்ளும் சுருக்கிக்கொள்ளக்கூடாது எனவும் விஜய் கூறியுள்ளார். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே தனது…

பாடசாலையா? பாலியல் குற்றவாளிகள் கூடாரமா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்! கொதிக்கும் ஈபிஎஸ்

Posted by - December 26, 2024 0
பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பது இதுதானோ? இந்த ஆட்சியின் அலட்சியத்தால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது- ஈபிஎஸ். தமிழ்நாட்டின் பெருமைமிகு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *