இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்கும் ஆஞ்சநேயாசனம்

266 0

ஆஞ்சநேயாசனத்தில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிப்பூரகம் மற்றும் அனாகதம் ஆகிய சக்கரங்கள் தூண்டப்படுகின்றன. இவ்வாசனத்தைத் தொடர்ந்து பயின்று வர இருதய நலன் பாதுகாக்கப்படுவதோடு பிராண ஆற்றலையும் உடல் முழுவதும் செலுத்த உதவுகிறது. உடலின் முக்கியமான உறுப்பு தண்டுவடம்.இடுப்பு பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்கும் ஆஞ்சநேயாசனம் | Low Lunge Pose  Anjaneyasana

உடல் இயக்கத்துக்கு அடிப்படையான 33 நரம்புகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மூளை மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இடையே உள்ள தகவல் பரிமாற்றத்துக்கு தண்டுவடம் அடிப்படையானது. உட்காருவது, நடப்பது, நிற்பது, பொருட்களை தூக்குவது போன்ற செயல்களின்போது நமது தோரணை சீரற்று இருப்பதால், தண்டுவடத்தில் பாதிப்புகள் ஏற்படும். இந்த ஆசனத்தை செய்வதன் மூலம் குணப்படுத்த முடியும்.

விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். வலது காலை முன் நோக்கி நகர்த்தி தரையில் பாதம் பதியும்படி ஊன்றிக்கொள்ளவும். பின்பு இடது காலை பின்னோக்கி கொண்டு சென்று, முழங்கால் தரையில் படுமாறு கிடைமட்டமாக வைக்கவும்.

பின்னர் இரண்டு கைகளையும் கூப்பி தலைக்கு மேல் நேராக தூக்கவும். இந்த நிலையில் முதுகுப் பகுதியை பின் நோக்கி வளைக்க வேண்டும். பிறகு ஆரம்ப நிலைக்கு வரலாம். இதைப் போன்று மற்றொரு காலுக்கும் செய்ய வேண்டும்.

பலன்கள்:

பெண்களுக்கு கை மற்றும் இடுப்பு பகுதியில் இருக்கும் தேவையற்ற கொழுப்பு கரையும். வாகனத்தில் பயணித்தல் மற்றும் பணியிடத்தில் கணினி முன்பு நீண்ட நேரம் வேலை பார்க்கும்போது ஏற்படும் தண்டுவட பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். முதுகுத்தண்டு மற்றும் முதுகுத் தசைகளை பலப்படுத்துகிறது.

தோள்களை விரிக்கிறது. நுரையீரலைப் பலப்படுத்துகிறது. வயிற்று உள் உறுப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. உடலின் ஆற்றலை வளர்க்கிறது. இடுப்புப் பகுதியின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. இடுப்புப் பகுதியில் உள்ள அதிக சதையைக் கரைக்க உதவுகிறது.

Related Post

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

Posted by - December 28, 2024 0
எதிர்நீச்சல் எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி,…

துவங்கியது குக் வித் கோமாளி சீசன் 6.. எண்ட்ரி கொடுத்த பிக் பாஸ் சௌந்தர்யா, இதோ

Posted by - April 1, 2025 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒன்று குக் வித் கோமாளி. இதுவரை ஐந்து சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 6வது சீசனை எதிர்பார்த்து…

வெயில் காலம் தானேனு அடிக்கடி மோர் குடிக்கிறீங்களா.? இந்த பக்கவிளைவுகளை சந்திப்பீங்க..!

Posted by - March 25, 2024 0
மோர், நம் சமையலறைகளில் பொதுவாக காணப்படும் பானங்களில் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், இந்த ருசியான பானத்தை சுவைக்காமல் ஒவ்வொருவரின் கோடைக்காலம் முழுமையடையாது. சில பிரத்தியேக கோடை கால…

ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!

Posted by - February 24, 2023 0
நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற…

லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்

Posted by - September 6, 2023 0
ரம்யா கிருஷ்ணன் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *