இன்ஸ்டாகிராம் காதல் !! சிறுமி 5 மாதம் கர்ப்பம்….

142 0

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் கைது.

இன்ஸ்டாகிராம் சிறுமியுடன் பழக்கம் 

சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அருண் விஜய் ( வயது 22 ) இவருக்கு அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10 வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில் இவர்களது பழக்கமானது காதலாக மாறியுள்ளது. பின்னர் அடிக்கடி சிறுமி அருண் விஜய் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்.

சோர்வாக இருந்த மாணவி

பலமுறை அருண் விஜய் அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டிற்கு வரும் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மிகுந்த சோர்வுடன் இருந்த மாணவி திடீரென்று மயக்கம் அடைந்து விழுந்திருக்கிறார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

சிறுமி 5 மாதம் கர்ப்பம்

மருத்துவமனையில் , மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்த நிலையில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே இது குறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் மருத்துவமனைக்கு வந்த போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் அருண் விஜய்யுடன் பழகி வந்தது தெரியவந்தது. எனவே வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அருண் விஜய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருக்கின்றனர்.

மேலும் மாணவிக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குவதை உறுதிப்படுத்துமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் இந்த சம்பவத்தில் அருண் விஜயின் பெற்றோருக்கு ஏதாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட காதலால் 14 வயது சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

அடுத்த 5 நாட்களுக்கு.. – வெதர்மேன் கொடுத்த ஷாக்

Posted by - April 22, 2024 0
அடுத்த 5 நாட்களுக்கு  வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வாநிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் அடுத்த…

மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளது – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Posted by - October 19, 2024 0
மத்திய அரசு தமிழை புறக்கணிப்பதாக திமுக- காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் கூறுவது வேடிக்கையாக உள்ளதாக  மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள…

ஆன்லைன் உணவு… திறக்க முடியாத பீரோல்… பொன்முடி வீட்டு சோதனையின்போது நடந்த சுவாரஸ்யங்கள்

Posted by - July 18, 2023 0
பொன்முடி வீட்டில் சோதனை நடைபெற்ற ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்து அதிகாரிகள் பொன்முடிக்கு வழங்கினர். அமைச்சர் பொன்முடி தொடர்பான இடங்களில், அமலாக்கத்துறையின் அதிரடி சோதனையில், சில…

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு

Posted by - November 7, 2023 0
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *